திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கை.. முதல்ல அங்க இருந்து ஆரம்பிங்க.. வானதி சீனிவாசன் பொளேர்

Google Oneindia Tamil News

திருப்பூர்: முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, அரசியல் காரணத்திற்காக பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்கக்கூடாது என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்றால் முதல்-அமைச்சர் முதலில் அவருடைய அமைச்சரவை சகாக்களில் இருந்து தொடங்க வேண்டும் என்றார்.

Recommended Video

    முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கை.. முதல்ல அங்க இருந்து ஆரம்பிங்க.. வானதி சீனிவாசன் பொளேர்

    இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி சாதனை விழா அவினாசி அரசு மருத்துவ மனை வளாகத்தில் நேற்று நடந்தது. பா.ஜனதா மாவட்ட செயலாளர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.

    விழாவில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கொரோன காலத்தில் சிறப்பாக சேவை புரிந்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது "இந்தியா கொரோனோ தடுப்பூசி 100 கோடி இலக்கை எட்டியுள்ளது. தொடர்ச்சியாக நாட்டு மக்கள் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு நாட்டை பிரதமர் மோடி வழி நடத்தி செல்கிறார்.

    பாலியல் புகார் வழக்கு; விசாரணையை தாமதப்படுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி முயற்சி - அரசு குற்றச்சாட்டுபாலியல் புகார் வழக்கு; விசாரணையை தாமதப்படுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி முயற்சி - அரசு குற்றச்சாட்டு

    எஸ்பி வேலுமணி

    எஸ்பி வேலுமணி

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தும் சோதனை என்பது ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்றால் முதல்-அமைச்சர் முதலில் அவருடைய அமைச்சரவை சகாக்களில் இருந்து தொடங்க வேண்டும்.

    வேண்டாம்

    வேண்டாம்

    ஊழல் என்று வந்துவிட்டால் முதல்-அமைச்சர் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசியல் காரணத்திற்காக அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது. உள்ளாட்சி தேர்தல் முழுமையாக விரைவில் நடத்தப்பட வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நிச்சயம் வாய்ப்பு உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    ஆதாரம்

    ஆதாரம்

    இடம் பெயர்ந்த பொதுமக்கள் ஆதார் கார்டு இருந்தால் தாராளமாக எங்கு வேண்டுமானாலும் தடுப்பூசி ஊசி போட்டுக் கொள்ளலாம். ஒரு சில நபர்கள் இந்த நாட்டில் தங்குவதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லாத போதுதான், அவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் யோசிக்கும் நிலை உள்ளது" இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

    சேலம் இளங்கோவன்

    சேலம் இளங்கோவன்

    திமுக ஆட்சி மாற்றம் நடந்த பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், வீரமணி உள்பட்டோரின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தினர். அதனை தொடர்ந்து தற்போது சேலம் கூட்டுறவு வங்கி தலைவரும், அதிமுக பிரமுகருமான சேலம் இளங்கோவன் வீட்டிலும் போலீசார் ரெய்டு நடத்தி உள்ளனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Coimbatore South MLA Vanathi Srinivasan said the move of corruption case against former minister should not be an act of revenge for political reasons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X