வங்கதேசத்திற்கு அமெரிக்கா தந்த சலுகை.. இனி என்னாகும்.. கொங்கு மண்டல மக்கள் அறிய வேண்டியவை

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: இந்தியாவிற்கு 18 சதவீதம் ஆக வரி குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த போது பலரும் உற்சாகம் அடைந்தனர்.இனி ஜவுளி துறைக்கு பொற்காலம் என்றார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி இரண்டு நாள் கூட நீடிக்கவில்லை. ஏனெனில் பிப்ரவரி 9ம் தேதி அமெரிக்காவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே கையெழுத்தான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின்படி, சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வங்கதேச ஜவுளி ஏற்றுமதிக்கு பூஜிய வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து நூல் ஏற்றுமதி குறையும். அதேபோல் ஜவுளி ஏற்றுமதியும் அமெரிக்காவிற்கு குறையும் அபாயம் உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் இந்தியாவிற்கு அபராத வரியான 25 சதவீதத்தை அண்மையில் நீக்கினார். அதேபோல் பரஸ்பரம் வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்துள்ளார். இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய மகிழ்ச்சியான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித் தொழில் விளங்குகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

The Unimaginable Crisis Facing Tiruppur US president Trump s Massive Offer to Bangladesh

தமிழ்நாடு முதலிடம்

ஏனெனில் இந்திய அளவில் 50 சதவிகித நூற்பாலைகள் உள்ள மாநிலமாகவும், அதிக பின்னலாடை உள்ளிட்ட ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது. இதன் காரணமாக இந்திய அளவில் ஜவுளித் தொழில் ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.2023-24 நிதியாண்டு நிலவரப்படி இந்தியாவின் ஜவுளிப் பொருள் ஏற்றுமதி 34.43 பில்லியன் அமெரிக்க டாலராகும். இதில் தமிழகம் 20.78 சதவிகிதம் 7.15 பில்லியன் டாலர் ஏற்றுமதியுடன் முதலிடத்தில் இருந்தது. திருப்பூர் தான் அதிக அளவில் பின்னலாடை ஏற்றுமதி செய்கிறது. இதுதான் எதார்த்தமாகும்.

வங்கதேசத்தில் போராட்டம்

வங்கதேசத்தில் அண்மையில் மாணவர்கள் போராட்டம் மற்றும் தொழிலாளர் பிரச்சனை இருந்தது. இதனால் பல ஆர்டர்கள் இந்தியாவிற்கு வந்தன. அப்படி வந்தவை திருப்பூருக்கு தான் அதிகம் வந்தன. இந்நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்பு பேரிடியாக இருந்தது. ஆனால் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், இந்திய வேளாண் சந்தையை அமெரிக்காவிற்கு திறந்து, அதற்கு பிரதிபலான 18 சதவீதம் வரியை அமெரிக்கா குறைத்தது.

வங்கதேசத்திற்கு பூஜ்யம் வரி

இப்படியான சூழலில் அமெரிக்காவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே கையெழுத்தான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின்படி, சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் வங்கதேச ஜவுளி ஏற்றுமதிக்கு பூஜிய வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. வங்கதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் மற்றும் ஜவுளிப் பொருட்கள், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருத்தி ( அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகளை பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படித் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே இந்த 0% வரிச் சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற அனைத்து ஜவுளிப் பொருட்களுக்கான பொதுவான சுங்க வரியை அமெரிக்கா 19% ஆகக் குறைத்துள்ளது (இது முன்பு 37% வரை இருந்தது).

வங்கதேசம் பதிலுக்கு தந்தவை

பதிலுக்கு வங்கதேசம் செய்தவை தான் முக்கியமானது. இந்தியாவை போலவே, இந்தச் சலுகையைப் பெறுவதற்காக, அமெரிக்காவின் விவசாயப் பொருட்கள் (கோதுமை, சோயாபீன்ஸ்), எல்.என்.ஜி (LNG) சந்தையை அமெரிக்காவிற்கு திறந்துவிட்டுள்ளது. அத்துடன் போயிங் விமானங்களை வாங்க வங்கதேசம் ஒப்புக்கொண்டிருக்கிறது.

இந்தியாவிற்கு ஏற்படும் தாக்கம்

வங்க தேசத்தின் ஒப்பந்தம் இந்திய ஜவுளித் துறையில் (குறிப்பாக திருப்பூர் போன்ற பகுதிகளில்) கவலையை ஏற்படுத்தி உள்ளது ஏனெனில் தற்போது இந்திய ஜவுளிப் பொருட்களுக்கு அமெரிக்கா 18% வரி விதிக்கிறது. ஆனால், வங்கதேசத்திற்கு 0% சலுகை கிடைப்பதால், அமெரிக்கச் சந்தையில் அவர்களின் பொருட்கள் இந்தியப் பொருட்களை விட விலை குறைவாக இருக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.

பருத்தி ஏற்றுமதி பாதிப்பு

வங்கதேசம் இதுவரை இந்தியாவிடமிருந்து அதிகப்படியான பருத்தியை இறக்குமதி செய்து வந்தது. இப்போது 0% வரிச் சலுகைக்காக அவர்கள் இந்திய பருத்தியைக் கைவிட்டு, அமெரிக்க பருத்தியை வாங்கத் தொடங்குவார்கள். இது இந்திய பருத்தி விவசாயிகளையும், நூல் ஆலைகளையும் பாதிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே பருத்தி இறக்குமதி அதிகரித்து விலை கடுமையாக குறைந்துள்ளது. இன்னும் இந்த பிரச்சனை விவசாயிகளை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

எனினும், இந்திய ஜவுளித் துறைக்கான வரியும் 18% ஆகக் குறைக்கப்பட்டிருப்பதால், தரம் மற்றும் வேகமான விநியோகம் மூலம் இந்தியா தனது சந்தையைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். ஆனால் எந்த அளவிற்கு அது சாத்தியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+