பெட்ஷீட்டுடன்.. ராத்திரி நேரம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த பிசினஸ்மேன்.. நடந்த திடீர் ட்விஸ்ட்!
பெட்ஷீட் வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற கும்பல் கைதானார்கள்
திருப்பூர்: பெண்ணின் வீட்டிற்குள் பெட்ஷீட்டுடன் ராத்திரி நுழைந்துவிட்டார் நாட்ராயன்.. ஆனால் எதிர்பாராத திருப்பமாக, நாட்ராயனை நிர்வாணமாக்கி.. வீடியோ எடுத்து.. பணம் பறித்த சம்பவம் ஒன்று திருப்பூரை அதிர வைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் நாட்ராயன்.. இவருக்கு 56 வயசாகிறது.. சொந்தமாக விசைத்தறி வைத்து போர்வைகளை தயாரித்து விற்கிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நாட்ராயனுக்கு ஒரு போன் வந்தது.. அதில் பேசிய பெண், தன்னுடைய சொந்தக்காரர்கள் அனைவரும் துணி வியாபாரம் செய்து வருவதாகவும், அதனால் விற்பனை செய்ய பெட்ஷீட்டுகள் அதிகளவில் தேவைப்படுவதாகவும் சொல்லி உள்ளார்.
பல்க்-ஆக பெட்ஷீட் ஆர்டர் வரவும், குஷியாகிவிட்டார் நாட்ராயன்.. அதன்படி பெட்ஷீட்டுகளை எடுத்து கொண்டு அந்த பெண் சொன்ன ஆண்டிபாளையம் அட்ரசுக்கு சம்பவத்தன்று இரவு 8 மணிக்கு சென்றார் நாட்ராயன்.. தன்னுடன் உறவினர் குமாரை நாட்ராயன் அழைத்து சென்றார்.
வீட்டிற்குள் நுழைந்ததுமே பெண் இவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். ஆனால் அப்போதே 4 பேர் கொண்ட கும்பல் பின்னாடியே வீட்டிற்குள் புகுந்தது.. நாட்ராயனனையும் குமாரையும் மிரட்டி முதலில் அவர்களிடமிருந்த செல்போன், 2 பவுன் சங்கிலி, 3 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டது.. பிறகு நாட்ராயனை நிர்வாணப்படுத்தி அந்த பெண்ணுடன் ஒன்றாக நிற்க வைத்து செல்போனில் வீடியோவும் எடுத்து கொண்டது.
அந்த வீடியோவை காட்டி 3 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று கும்பல் மிரட்டி உள்ளது.. அதிர்ந்துபோன நாட்ராயன் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.. அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடிவந்த நிலையில், சம்பந்தப்பட்ட 5 பேர் கொண்ட கும்பல் வசமாக சிக்கி கொண்டுவிட்டது.
இதில் கவிதா என்பவர்தான் முக்கியமாவனவர் என்று தெரிகிறது.. அவருக்கு இன்னொரு பெயர் வெண்ணிலாவாம்.. வயசு 27 ஆகிறது. அவினாசி பகுதியை சேர்ந்தவர்.. மேலும் அவருடன் தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிபாண்டி, திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கிமுத்து, ஜெபராஜ், சின்னதுரை ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.. அவர்களிடம் இருந்து நகை, பணம், கார், அரிவாள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டது.. கயிறு, மிளகாய் பொடியையும் வைத்திருந்தார்களாம்.. அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications