Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர் வழக்கறிஞர் படுகொலை.. சிபிஐ விசாரணை வேண்டும்.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று சொத்து தகராறில் வழக்கறிஞர் முருகானந்தம் கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் முருகானந்தத்தின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து அவர்களுடன் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்தவர் லிங்குசாமி. இவர் முன்னாள் ராணுவ அதிகாரி. இவரது மகன் முருகானந்தம். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். லிங்குசாமியின் தம்பி தண்டாயுதபாணி. லிங்குசாமிக்கும் தண்டாயுதபாணிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

tiruppur-lawyer-muruganandam-murder-kin-demand-cbi-probe-refuse-to-accept-body-in-protest

இதன் காரணமாக கூலிப்படையை ஏவி லிங்குசாமியை தண்டாயுதபாணி வெட்டி படுகொலை செய்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில் போதிய சாட்சியங்கள் இல்லாததால் இந்த கொலை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் லிங்குசாமி - தண்டாயுதபாணி குடும்பத்தினருக்கு இடையே நீண்ட நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதற்கிடையே தண்டாயுதபாணியின், தாராபுரம் நகராட்சி மத்திய பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள மெட்ரிக் பள்ளியானது விதிகளை மீறி நான்கு மாடிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், சட்டப்படி அங்கு மூன்று மாடிகளுக்கு மேல் கட்டக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகானந்தம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் பள்ளியின் கூடுதல் கட்டடமான 4-வது மாடி இடிக்கப்பட்டது.

இதனால் முருகானந்தம் மீது தண்டாயுதபாணி கடும் ஆத்திரத்தில் இருந்தார். அந்த சமயத்தில் தான் முருகானந்தம் பள்ளியை சோதனை செய்ய வந்த அதிகாரிகளோடு அங்கு வந்திருந்தார். இதனை அறிந்த தண்டாயுதபாணி கூலிப்படையை ஏவி முருகானந்தத்தை அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து உயிரிழந்தார். முருகானந்தத்தை காப்பாற்ற முயன்ற ரகுராம், தினேஷ் ஆகிய வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீசார் முருகானந்தம் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சினிமா பாணியில் கூலிப்படையினர் வழக்கறிஞரை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையே இன்று முருகானந்தம் கொலை தொடர்பாக பள்ளியின் தாளாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் ராம், சுந்தரன், நாகராஜன், நாட்டுதுரை ஆகிய 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம் கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, இன்று திருப்பூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் திருப்பூர் அரசு மருத்துவமனையில் முருகானந்தத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறி போராடி வருகிறார்கள். தொடர்ந்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+