திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வடமாநிலத்தவர் தமிழர்களை தாக்கியதாக பரவும் வீடியோ! இறங்கும் தனிப்படை!கூடவே சைபர் கிரைம்! பரபர ஆக்ஷன்

வடமாநிலத்தவர் தமிழக இளைஞர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் தமிழக இளைஞர்களை வட மாநில தொழிலாளர்கள் விரட்டியடித்ததாக இணையத்தில் வீடியோ பரவி வருகிறது. இந்தச் சூழலில் இது குறித்து விசாரிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. நிச்சயம் வேலை கிடைக்கும். அதிக ஊதியம் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் இங்கு வருகிறார்கள்.

தமிழ்நாட்டிலும் பல துறைகளில் ஆட்கள் தேவை அதிகமாக உள்ளது. குறைந்த ஊதியத்தில் இதுபோன்ற துறைகளில் ஆட்கள் தேவையாக இருப்பதால் அதை வடமாநிலத்தவர்கள் நிரப்புகின்றனர்.

"இது வெறும் தொடக்கம் தான்.. வடமாநிலத்தவர் தாக்குதல் அதிகரிக்கும்.. திருப்பூர் சம்பவம்! சீமான் பரபர

 வட மாநிலத்தவர்

வட மாநிலத்தவர்

ஒவ்வொரு நாளும் வட இந்தியாவில் இருந்து வரும் ரயில்களைப் பார்த்தால் எந்தளவுக்கு வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வருகிறார்கள் என்பது புரியும். முதலில் சென்னை உட்பட பெருநகரங்களில் மட்டுமே இதுபோல வட இந்தியர்கள் அதிகம் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நகரங்களிலும் கூட வடமாநிலத்தவர் அதிகரித்துள்ளனர். குறிப்பாகத் திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் வட மாநிலத்தவர்கள் அதிகமாகவே உள்ளனர்.

வலியுறுத்தல்

வலியுறுத்தல்

அதேநேரம் இப்படி அதிகமாக வரும் வட மாநிலத்தவர்கள் மீதான எதிர்ப்பும் அதிகரித்தே வருகிறது. குறைந்த ஊதியத்தில் அவர்கள் வேலை பார்க்கத் தயாராக உள்ளதால் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றர். மேலும், வட மாநிலத்தவர்களால் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் எனவே வட மாநிலத்தவர்கள் வருகையைக் கண்காணிக்க சில கட்டுப்பாடுகள் தேவை என்றும் மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

 வீடியோ

வீடியோ

இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் பரவிய வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் தமிழக இளைஞர்களை வட மாநிலத்தவர்கள் விரட்டியடிப்பதாகக் கூறி பலரும் அந்த வீடியோவை பகிர்ந்தனர். அந்த வீடியோவில் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் தமிழக இளைஞர்களை விரட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் பெரிய சர்ச்சை ஏற்பட்டது.

 விரட்டியடிப்பு

விரட்டியடிப்பு

இருப்பினும், உண்மையில் அங்கு நடந்ததே வேறு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கடந்த 14ஆம் தேதி திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் இருந்த பனியன் கம்பெனியில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்கள் டீ குடிக்க அங்கிருந்த கடைக்குச் சென்றுள்ளனர். சிலர் அங்குப் பெட்டிக்கடையில் புகைபிடித்ததுள்ளனர். அப்போது அங்கு வந்த மதுபோதையில் இருந்த நான்கு தமிழக இளைஞர்கள் வடமாநில இளைஞர் தங்கள் மீது வேண்டுமென்ற சிகரெட் புகை விட்டதாகப் பிரச்சினை செய்துள்ளனர்.

 நடந்தது என்ன

நடந்தது என்ன

இருப்பினும், உண்மையில் அங்கு நடந்ததே வேறு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கடந்த 14ஆம் தேதி திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் இருந்த பனியன் கம்பெனியில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்கள் டீ குடிக்க அங்கிருந்த கடைக்குச் சென்றுள்ளனர். சிலர் அங்குப் பெட்டிக்கடையில் புகைபிடித்ததுள்ளனர். அப்போது அங்கு வந்த மதுபோதையில் இருந்த நான்கு தமிழக இளைஞர்கள் வடமாநில இளைஞர் தங்கள் மீது வேண்டுமென்ற சிகரெட் புகை விட்டதாகப் பிரச்சினை செய்துள்ளனர்.

 தனிப்படை

தனிப்படை

இதுதான் அங்கு நடந்ததாக போலீசாரும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்தச் சம்பவத்தைத் திரித்து வடமாநில தொழிலாளர்கள் தாக்குவது போன்ற சித்தரித்து வீடியோவை சிலர் பரப்பியதாகவும் இது குறித்து விசாரிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் திருப்பூர் மாநகர போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சைபர் கிரைம் காவலர்களை உள்ளடக்கிய இந்த தனிப்படை வீடியோவை தவறாகச் சித்தரித்துப் பரப்பியவர்கள் குறித்து விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது.

English summary
False video spreading on north indians attack in Tiruppur: Tiruppur police latest news in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X