Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்களுக்கு வலிமை அப்டேட் தான வேணும்...இந்தா பிடிங்க... தல ரசிகர்களை, வாக்காளர்களை கவர்ந்த கலெக்டர்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: அஜித் ரசிகர்களால் வலிமை அப்டேட் தொடர்ந்து டிரென்டில் இருக்க, வலிமை பட டைட்டிலையே பயன்படுத்தி வாக்காளர்களிடம் வாக்களிக்க விழிப்புணர்வு செய்துள்ளார் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன்.

Recommended Video

    சென்னை: தேர்தல் ஆணையத்தின் வலிமை அப்டேட்… குஷியில் ‘தல’ ரசிகர்கள்!

    ''இங்கே வலிமை அப்டேட் உள்ளது மக்களே. ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது' என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் கலெக்டர்.

    அஜித் ரசிகர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பிரபலங்களிடம் வலிமை அப்டேட் கேட்டு நச்சரிக்க தொடங்கினார்கள். நடிகர் அஜித் அவர்களை கண்டித்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    நச்சரிக்கும் ரசிகர்கள்

    நச்சரிக்கும் ரசிகர்கள்

    எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் படம் வலிமை. இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் நெருங்கிய போதிலும் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட எந்த அறிவிப்புகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அஜித் ரசிகர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பிரபலங்களிடம் வலிமை அப்டேட் கேட்டு நச்சரிக்க தொடங்கினார்கள்.

    பொறுமை இழந்த அஜித்

    பொறுமை இழந்த அஜித்

    எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் படம் வலிமை. இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அறிவிப்பு வெளியிடப்பட்டு 2 ஆண்டுகள் நெருங்கிய போதிலும் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட எந்த அறிவிப்புகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அஜித் ரசிகர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பிரபலங்களிடம் வலிமை அப்டேட் கேட்டு நச்சரிக்க தொடங்கினார்கள்.

    வலிமை அப்டேட்டில் அசத்திய கலெக்டர்

    வலிமை அப்டேட்டில் அசத்திய கலெக்டர்

    இவ்வாறு வலிமை அப்டேட் தொடர்ந்து டிரென்டில் இருக்க, வலிமை பட டைட்டிலேயே பயன்படுத்தி வாக்காளர்களிடம் வாக்களிக்க விழிப்புணர்வு செய்துள்ளார் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன். '' ''இங்கே வலிமை அப்டேட் உள்ளது மக்களே. ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது' என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார் கார்த்திகேயன்.

    ரசிகர்கள் பாராட்டு

    ரசிகர்கள் பாராட்டு

    வலிமை அப்டேட் என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி கலெக்டர் இந்த பதிவை வெளியிட்டது பல்வேறு தரப்பிலும் ஆதரவை பெற்றது. குறிப்பாக அஜித் ரசிகர்கள் இதனை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், 'நான் என் வாழ்க்கையில் முதல் வாக்கு அளிக்க போகிறேன் வாழ்த்தலாமே சார்' என்று பதிவிட்டிருந்தார். அதற்கு அஜித் படங்களின் டைட்டிலை வைத்து பதிலத்த கலெக்டர் கார்த்திகேயன், ''வாழ்த்துக்கள்... நேர்மையா, வலிமையா, அட்டகாசமா, அமர்க்களமா vote போடுங்க' என்று பதிவிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+