மூத்த தலைவர்களை ஓரம்கட்டும் "பட்டத்து இளவரசர்".. உதயநிதி மீது நேரடி தாக்கு.. மோடி பொளேர்!
தாராபுரம்: திமுகவில் வாரிசு அரசியல் கோலோச்சுவதாக கூறிய பிரதமர் மோடி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் செய்வதற்காக திருப்பூர் வந்தார். தாராபுரம் தொகுதியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசினார்.
தாராபுரம் தனி தொகுதியில் பாஜக தமிழக தலைவர் எல். முருகன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பேசினார். திமுகவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை பிரதமர் மோடி இதில் வைத்தார்.

மோடி
இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனம் செய்துள்ளார். அதில், நான் உங்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றுதான், பாஜகவின் தேர்தல் அறிக்கையை வாங்கி விபரமாக படியுங்கள். அதை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். அதிமுக-பாஜ கூட்டணி வெற்றிக் கூட்டணி.

உதயநிதி
தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கொடுக்கிறது மத்திய பாஜக அரசு. தமிழகத்தில் 16 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சொட்டு நீரும் அதிக விளைச்சலை தர வேண்டும் என்பது தாரக மந்திரம். திமுக, காங். ஊழல் கண்கள் தொழில் வளர்ச்சியை விரும்பாது.

ஸ்டாலின்
திமுக ஆட்சியில் மின்வெட்டால் இப்பகுதி தொழில்கள் பாதிக்கப்பட்டன. பாஜவுக்கு வளர்ச்சி தான் முக்கியம்,ஆனால் திமுக,காங்கிரசுக்கு குடும்பம் தான் முக்கியம். அவர்களுக்கு வாரிசு அரசியல்தான் முக்கியம். குடும்பத்தை முன்னேற்றுவதுதான் இவர்களின் நோக்கம்.

திமுக
திமுக பட்டத்து இளவரசருக்காக அக்கட்சியில் முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். திமுக இளவரசர் உதயநிதி, மூத்த தலைவர்களை ஓரம்கட்டிவிட்டி நடுநாயகமாக இருக்கிறார்கள். உதயநிதிக்காக கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. உதயநிதி, திண்டுக்கல் லியோனி ஆகியோர் பெண்களை இழிவாக பேசுகின்றனர்.

பெண்கள்
பெண்களை இழிவுபடுத்துவதுதான் திமுக என்று உதயநிதி ஸ்டாலின் குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். திமுகவை வாரிசு அரசியல் கட்சி என்று பலமுறை பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். ஆனால் முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு பிரதமர் மோடி நேரடியாக விமர்சனம் செய்துள்ளார்.