மகாராணியா அவளை பார்த்துக்கிறேனு கெஞ்சினேனே.. பல்லடம் கொடூரம்! திருப்பூர் MBA மாணவன் சிக்கியது எப்படி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் நடந்த சம்பவம் கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.. தாய், மகள் ரத்தம் சொட்டச் சொட்ட இரட்டை கொலை சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.. இது தொடர்பான கைதான நபர் இன்று வாக்குமூலம் தந்துள்ளார்.

பச்சாபாளையத்தை சேர்ந்த பழனிசாமி - தனலட்சுமி தம்பதியின் 25 வயது மகள் பூவரசி. இவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்சயன் என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Palladam Crime

திருப்பூர் எம்பிஏ மாணவன்

அக்ஷயன் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு எம்பிஏ படித்து வருகிறார். ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி வந்த இவர்கள், பிறகு செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு காதலிக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக இவர்களது காதல் தொடர்ந்து வந்துள்ளது.

இந்த காதல் விவரகாரம் பூவரசி வீட்டுக்கு தெரிந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.. இதனால் பூவரசியும் தன் மனதை மாற்றி கொண்டுள்ளார்.. அக்‌ஷயனுடன் பேசுவதையும் படிப்படியாகக் குறைத்துக் கொண்டார்.. பெற்றோர் எதிர்ப்பதால் நாம் பிரிந்துவிடலாம் என்றும் அக்‌ஷயனிடம் சொல்லி காதலை துண்டித்துள்ளார்.

பல்லடம் லாட்ஜ்

காதலி தன்னை விட்டுப் பிரிந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அக்ஷயன், பூவரசியை நேரில் சந்தித்துப் பேச முடிவெடுத்தார். அதற்காக பல்லடம் பகுதியில் 4 நாட்களுக்கு முன்பு ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினார்.. கடந்த 3 நாட்களாகவே , அந்த லாட்ஜில் தங்கியிருந்தபடியே, பூவரசியின் வீட்டின் முகவரியை கண்டுபிடித்துள்ளார்.

நேற்று முன்தினம் அதாவது 10ம் தேதி மாலை பூவரசியின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது பூவரசியின் பெற்றோர், அவரை கடுமையாகத் திட்டி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அக்ஷயன், மறுநாள் காலை மறுபடியும் பூவரசியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.. அங்கே பூரவசியின் அம்மாவிடம் திருமண பேச்சை எடுக்கவும், அவர் மீண்டும் மறுத்துள்ளார்.

தாய், காதலி கொலை

இதனால் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்கு போன அக்‌ஷயன் , வீட்டில் ஓரமாகக் கிடந்த அரிவாளை எடுத்து பூவரசியை வெட்டியுள்ளார். இதைக் கண்டு பதறிப்போய் தடுக்க வந்த அம்மா தனலட்சுமியையும் வெட்டியுள்ளார். இதில் தாய் மற்றும் மகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்தம் சொட்டச் சொட்ட அரிவாளுடன் நின்ற அக்சயனைப் பிடித்து கயிற்றால் கட்டிப்போட்டு பல்லடம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்ததுடன், அக்சயனையும் கைது செய்து தீவிர விசாரணைக்கு பிறகு சிறையில் அடைத்தனர்.

அக்‌ஷயன் தந்த வாக்குமூலம்

போலீசாரிடம் அக்‌ஷயன் தந்த வாக்குமூலத்தில், நான் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன். கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு இன்ஸ்டாவில் அறிமுகமானார் பூவரசி.. அதன்பிறகு, நேரில் சந்திக்க முடிவு செய்தோம். பூவரசியை பார்க்க நான் பல்லடம் சென்றேன். முதல் சந்திப்பிலேயே எங்களுக்குள் காதல் மலர்ந்தது.

பூவரசி வீட்டிற்கு ஒரே பெண் என்பதால், எங்களுடைய இந்த காதலை அவருடைய பெற்றோர் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார். ப்டிப்பு முடிந்ததும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தோம், இருந்தாலும் நண்பர்கள் முன்னிலையில் பூவரசியின் கழுத்தில் சிறிய தங்கச சங்கிலி ஒன்றை அணிவித்தேன்.

மகாராணி போல வாழ வைப்பேன்

இந்த தங்க சங்கிலியை பார்த்த பூவரசியின் அம்மா தனலட்சுமி, அதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போதுதான் எங்களது காதல் விவகாரம் பூவரசி வீட்டிற்கு தெரியவந்துள்ளது. 2 தரப்பினரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், இந்த காதலுக்கு பூவரசியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பூவரசியும் காதலை முறித்து கொண்டார்.

சம்பவத்தன்றுகூட பூவரசியின் அம்மா தனலட்சுமியிடம் நான் கெஞ்சினேன்.. "எனது எதிர்காலக் கனவு, திட்டங்கள், ஆசை எல்லாமே பூவரசிதான்.. எங்களை தயவுசெய்து சேர்த்து வையுங்கள், பூவரசியை மகாராணி போல நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கேட்டேன்.. ஆனால், தனலட்சுமி அதை ஏற்காமல் அவரை கேவலமாகப் பேசி வெளியே போகுமாறு சொன்னார். அந்த ஆத்திரத்தில்தான் கொன்றேன்" என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+