அரை மணி நேரம் லுக் விட்ட இளைஞர்.. சூடா ஒரு டீ.. ஹேன்ட் பேக் டுமீல்... போலீஸாருக்கு வந்த சோதனை!
டிராபிக் போலீஸ்காரரின் பேக்கை திருடும் நபரின் வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
திருப்பூர்: ஒன்னு போலீஸ்காரர் பேக்கை திருடுகிறார்.. இல்லேன்னா போலீஸ்காரர் பேக்கை இன்னொருத்தர் ஆட்டைய போடுகிறார்.. ஆகமொத்தம் இந்த ஹேண்ட் பேக்கில்தான் எல்லோருக்கும் கண்ணாக இருக்கிறது.
4 நாளைக்கு முன்னாடி சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் போலீஸ்காரர் ஒருவர் ஹேண்ட் பேக்கை திருடும் காட்சி இணையத்தில் வைரலானது. அது சம்பந்தமாக போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், திருப்பூரில் டிராபிக் போலீஸ்காரர் ஒருத்தர் பேக்கை இளைஞர் ஒருவர் ஆட்டைய போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

சிக்னல் ரோடு
மாநகர வடக்கு போக்குவரத்து டிராபிக் போலீஸ்காரருக்கு, குமரன் ரோட்டில் உள்ள பார்க்ரோடு சிக்னலில்தான் டியூட்டி. மதியானம் 2 மணிக்கு வழக்கமாக வேலைக்கு வந்தார். எப்போ வந்தாலும், கையில் கொண்டு வரும் பேக்கை, எதிரில் இருக்கும் ஒரு டீக்கடையில் வைத்துவிட்டுதான் வேலை பார்ப்பார்.

சிசிடிவி கேமரா
அப்படித்தான் நேற்று முந்தா நாளும் வேலையை ஆரம்பித்தார். சாயங்காலம் 6 மணிக்கு டியூட்டி முடிஞ்சு வந்து பார்த்தால் பேக்கை காணோம். டீ கடையில் வேலை பார்க்கிற எல்லாரையும் கேட்டாச்சு.. யாருமே பார்க்கவில்லை, எடுக்கவில்லைன்னு சொல்லி விட்டனர். இதனால் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

நோட்டம்
அந்தவீடியோவில், ஒரு மொட்டை தலை இளைஞர் வருகிறார். போலீஸ்காரர் பேக் வைத்திருந்த பெஞ்சில் உட்கார்ந்து சூடா ஒரு டீ சாப்பிடறார். பக்கத்தில் இருந்த பேக்கை பார்த்துவிட்டார். கண்ணை உறுத்துகிறது.. கிட்டத்தட்ட அரைமணி நேரம் சுற்றிலும் நோட்டம் போடறார்.

விசாரணை
பிறகு நைசாக அந்த பேக்கை தோளில் எடுத்து மாட்டிக் கொண்டு நழுவி செல்கிறார். பட்டபகலில், இவ்ளோ ஜனநடமாட்டம் இருக்கும்போது, ஒரு போலீஸ்காரர் பேக்கையே லவட்டிக்கிட்டு போனது யாரா இருக்கும் என்று போலீசார் மண்டை காய்ந்து போயுள்ளனர். இது சம்பந்தமான விசாரணையும் நடக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications