அடடே.. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க.. கலெக்டர் செய்யும் செயலை பாருங்க.. குவியும் பாராட்டு!..செம!
மயிலாடுதுறை: மாறி வரும் காலநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஒவ்வொரு நாடுகளுக்கும் பெரும் சவாலாக விளங்குகிறது. இந்தியாவிலும் காலநிலை மாற்றம் பெரும் தலைவலியாக இருக்கிறது.
Recommended Video
வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் ஒரு நாள் அரசு அதிகாரிகள் சைக்கிளில் வர வேண்டும். நடந்து அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கலெக்டர் லலிதா
இதனை கன கச்சிதமாக கடைபிடித்தது வருகிறார் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா. வாரத்தில் ஒருநாள் அவர் அரசு அலுவலகத்துக்கு பொது போக்குவரத்தில் வந்து செல்ல அவர் முடிவெடுத்துள்ளார். அதாவது இன்று நாஞ்சில் நாடு பகுதியில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அரசுப் பேருந்தில் வந்தடைந்தார் கலெக்டர் லலிதா.

நடந்தே வந்தார்
தொடர்ந்து அவர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கி, அங்கு இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடந்தே வந்து சேர்ந்தார். அவர் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்து அலுவலகம் வந்தது இதில் கூடுதல் அம்சமாகும். மாவட்ட கலெக்டருடன் அதிகாரிகளும் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து வந்தடைந்தனர்.

அதிகாரிகளுக்கு முன்மாதிரி
வாரத்தில் ஒருநாள் இதுபோல் அனைத்து அதிகாரிகளும் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் அன்புடன் கேட்டுக் கொண்டார். இப்போது அரசு அதிகாரிகள் சிலரே கால் தரையில் படாமல் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பகட்டாக வந்து இறங்கும் நிலையில், அவர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக இருக்கிறார் கலெக்டர் லலிதா.

குவியும் பாராட்டு
கலெக்டர் லலிதாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். இப்படி ஒரு நாள் மட்டும் பொது போக்குவரத்தில் வந்தால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து விடுமா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு, தமிழகத்தில் இப்படி ஒவ்வொருவரும் வாரம் ஒரு நாளில் இதனை செய்தால் கண்டிப்பாக காற்று மாசுபாடு குறையும் என்று தனது டிரேட் மார்க் புன்னகையுடன் பதில் தருகிறார் எளிமை கலெக்டர் லலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications