திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தினமும் 160 கிலோ.. மக்களுக்கு குறைந்த விலையில் மீன் விற்பனை.. கலக்கும் திருச்சி மத்திய சிறை!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள குளத்தில் இருந்து மொத்தம் 160 கிலோ மீன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள குளத்தில் இருந்து மொத்தம் 160 கிலோ மீன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள குளத்தில் மீன்கள் வளர்க்கும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது மீன்கள் விற்பனை செய்யும் வகையில் தயாராக உள்ளதால் பொதுமக்கள் குறைந்த விலையில் பெற்று பயனடையும் வகையில் குறைவான விலையில் மீன்கள் விற்கப்படுகிறது.

160 Kg fish sold out in single day in Trichy Central Jail

வெளிச்சந்தையை விட 10% குறைவான விலையில் கிலோ 200 வீதம் விற்பனை செய்யப் படுகிறது. கடந்த வாரம் முதல் தொடங்கியுள்ள விற்பனையில் கட்லா, ரோகு, பவானி உள்ளிட்ட வகை மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது.

சிறைவாசிகள் பாதுகாப்பு நலன் கருதி அவர்களை விற்பனைப் பணியில் ஈடுபடுத்தா வண்ணம் பணிகள் செய்யப்படுகிறது. விற்பனைக்கு தயாராக உள்ள மீன்களை சுகாதாரமான முறையில் உயிர் மீன்களாக சிறைக்காவலர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறைக்காவலர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முக கவசம் அணிந்து சுகாதாரத்துடன் விற்பனை செய்து வருகின்றனர் .

லாக்டவுன் 4.0.. அனைத்து மண்டலங்களிலும் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அனுமதி.. கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர!லாக்டவுன் 4.0.. அனைத்து மண்டலங்களிலும் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அனுமதி.. கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர!

மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளிகள் பின்பற்றும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று காலை நடை பெற்ற விற்பனையில் சுமார் 160 கிலோ மீன் (தலா ரூ.200) விற்பனை நடை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
160 Kg fish sold out in the single day in Trichy Central Jail yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X