• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மியான்மரை தொடர்ந்து கம்போடியா.. சித்ரவதை செய்யப்படும் 400 தமிழர்கள்.. தாயகம் திரும்பிய தமிழர் வேதனை!

Google Oneindia Tamil News

திருச்சி: கம்போடியா நாட்டில் உள்ள சமூக விரோத கும்பலிடம் தமிழகத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்து வருவதாக தாயகம் திரும்பிய சையது இப்ராஹிம் வேதனை தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் ஐடி வேலை எனக்கூறி அழைத்து செல்லப்பட்ட 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்கள், மியான்மர் நாட்டில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மியான்மரில் சிக்கித் தவிக்கும் தங்களை மீட்க கோரி, அவர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து அரசின் முயற்சியால், 13 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே மியான்மர் போல், கம்போடியா நாட்டிலும் இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

பட்டினி, ஷாக் ட்ரீட்மெண்ட்.. கம்போடியாவில் 400 தமிழர்களுக்கு நடக்கும் கொடுமை - மீட்க கோரும் ராமதாஸ் பட்டினி, ஷாக் ட்ரீட்மெண்ட்.. கம்போடியாவில் 400 தமிழர்களுக்கு நடக்கும் கொடுமை - மீட்க கோரும் ராமதாஸ்

கம்போடியாவில் சிக்கிய தமிழர்கள்

கம்போடியாவில் சிக்கிய தமிழர்கள்

இதனை கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சையது இப்ராகிம் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து சையது இப்ராகிம் கூறுகையில், தான் வணிக விசாவில் கடந்த ஜூலை மாதம் ரூ.3 லட்சம் செலவு செய்து கம்போடியா நாட்டிற்கு சென்றேன். என்னை திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் அங்கு அனுப்பி வைத்தனர்.

 மோசடி கும்பல்

மோசடி கும்பல்

கம்போடியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் என்னை 4 ஆயிரம் டாலருக்கு விற்பனை செய்தார். அங்கு எனக்கு உரிய வேலை ஏதும் கொடுக்கப்படவில்லை. ஆயிரம் டாலர் சம்பளம் கொடுப்பேன் என்று கூறிவிட்டு, சம்பளம் கொடுக்காமல் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமல்லாமல், ஏதேனும் உதவி தேவை என்று கேட்டால் கூட கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதுகுறித்து முதலில் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினருக்கு தகவல் தெரிவித்தேன். பல்வேறு முயற்சிகளுக்கு இடையே எஸ்டிபிஐ கட்சியினரின் உதவியுடன் திருச்சி வந்து சேர்ந்தேன் என்று தெரிவித்தார்.

கம்போடியாவில் சித்ரவதை

கம்போடியாவில் சித்ரவதை

தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கம்போடியா நாட்டில் சிக்கித்தவித்து வருகின்றனர். அங்கு அவர்கள் சொல்லும் சமூக விரோத செயல்களை செய்யவில்லை என்றால் அடிப்பது, உணவை கொடுக்க மறுப்பது, மின்சாரத்தை உடலில் பாய்ச்சுவது போன்ற கொடுமைகளை செய்வதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

மீட்கக் கோரிக்கை

மீட்கக் கோரிக்கை

தொடந்து, இதுபோன்ற கொடுமைகள் செய்யும் வீடியோ தன்னிடம் உள்ளது. துப்பாக்கி வைத்து மிரட்டுகின்றனர். இந்திய தூதரகத்தை சேர்ந்தவர்களே அவர்களிடம் பேச பயப்படுகிறார்கள். இப்போது இந்திய தூதரக அதிகாரிகள் மீட்பதற்கான முயற்சியை மேற்கொள்கின்றனர். விழிப்புணர்வு ஏற்படுத்தி எல்லோரையும் காப்பாற்ற வேண்டும். கம்போடியாவில் சிக்கி உணவு இன்றி தவிப்பவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்தார். தொடந்து, இதுபோன்ற கொடுமைகள் செய்யும் வீடியோ தன்னிடம் உள்ளது. துப்பாக்கி வைத்து மிரட்டுகின்றனர். இந்திய தூதரகத்தை சேர்ந்தவர்களே அவர்களிடம் பேச பயப்படுகிறார்கள். இப்போது இந்திய தூதரக அதிகாரிகள் மீட்கதற்கான முயற்சியை மேற்கொள்கின்றனர். விழிப்புணர்வு ஏற்படுத்தி எல்லோரையும் காப்பாற்ற வேண்டும். கம்போடியாவில் சிக்கி உணவு இன்றி தவிப்பவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்தார்.

மேலும் ஆள்கடத்தல் கும்பல்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் இந்தியர்களை கடத்த முயற்சிப்பதால், போலி வேலை வாய்ப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதனால் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளது.

English summary
Syed Ibrahim, who has returned home, has Requested Government that action should be taken to rescue those trapped in Cambodia without food.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X