'அண்ணாமலை மீது குற்றவியல் நடவடிக்கை எடுங்க'! அன்பில் மகேஷ் ஆதரவாளர் திருச்சி எஸ்பி யிடம் புகார் மனு
திருச்சி: அமைச்சர் அன்பில் மகேஷின் புகழுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அண்ணாமலை பொய் தகவல்களை வெளியிட்டதாக கூறி அவர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞரும், அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளருமான முரளிகிருஷ்ணன் என்பவர் திருச்சி எஸ்.பி.யிடம் அளித்துள்ள புகார் மனு விவரம் வருமாறு;

''நான் மேற்கண்ட முகவரியில் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறேன். 18.04.2023 தேதி மதியம் 1.00 மணி அளவில் @mknadvocate என்ற Twitter கணக்கை நான் பார்த்துக் கொண்டு இருக்கும் போது @annamalai_k என்ற Twitter கணக்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி MCA அவர்களை பற்றி அவதூறாகவும், உண்மைக்கு மாறான, பொய்யான, கற்பனை செய்யப்பட்ட ஒரு படங்களை தமிழ்நாடு BJP தலைவர் அண்ணாமலை என்பவர் வெளியிடப்பட்டுள்ளதை பார்த்தேன்.''
''அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஊழல் செய்து கோடிக்கணக்கான சொத்து வைத்து இருந்ததாகவும், ஒரு வீடியோ வெளியிட்டு அதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் வெளியிட்டு இருப்பதை நான் பார்த்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இதனால் எனக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் இன்று தங்களிடம் இந்த புகார் மனு கொடுக்கிறேன். ''

''எனவே பாரம்பரியமாக பொது வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்தி பொது மக்களிடம் பெரும் நன் மதிப்பு நற்பெயர் எடுத்த முன்னாள் அமைச்சர் அமரர் அன்பில் தர்மலிங்கம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழி ஆகியோரின் குடும்ப கௌரவத்தை கெடுக்கும் எண்ணத்தில் அவர்களின் புகழுக்கு ஊறு விலைவித்து பொய் செய்திகளை வெளியிட்ட BJP தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை மீது சட்டரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்க பணிவுடன் கேட்டுக்கொள்வதுடன அந்த பொய் செய்தியை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.''
இவ்வாறு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications