திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா: உடம்பில் ஆக்சிஜன் அளவு குறையாமல் இருக்க இதை சாப்பிடுங்க - சித்த மருத்துவர் காமராஜ் டிப்ஸ்

கொரோனா நோய் தொற்றினால் நம்முடைய உடம்பில் ஆக்சிஜன் அளவு குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் காமராஜ் விளக்கம்

Google Oneindia Tamil News

திருச்சி: வீட்டில் உள்ள அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடல் வலுப்பெற ரத்த சோகை நீங்க, மூட்டுவலி, ஆஸ்துமா, இதய நோய், கண்பார்வை குறைபாடு, ஞாபக சக்தி அதிகரிக்க, இளமையாக இருக்க நெல்லிக்காய் லேகியத்தை 3 வயதிலிருந்து 12 வயது வரை 5 கிராம் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 10 கிராம் இருவேளை ஆகாரத்திற்கு பிறகு சாப்பிட கொடுக்கலாம் என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்றினால் ஆக்சிஜன் அளவு குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் காமராஜ் விளக்கமளித்துள்ளார்.

 Best tips from siddha doctor for increasing oxygen

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் சார்பில் ரயில் பயணிகள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி ரயில்வே ஜங்ஷனில் நேற்று நடந்தது. இதில் திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், ரெயில் நிலைய மேலாளர் விருதாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கி ரயில் பயணிகள், ஊழியர்கள் மற்றும் ரயில்வே போலீசாருக்கு கபசுர குடிநீர் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கினர். நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் அளவு குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் காமராஜ் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவாது: அமுக்கரா சூரணத்தை மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 250 மில்லி கிராம் எடுத்து தேனில் குழைத்து காலை இரவு ஆகாரத்திற்கு பிறகு கொடுக்கலாம்.

12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 500 மில்லி கிராமில் இருந்து ஒரு கிராம் எடுத்து தேனில் குழைத்து இரவில் ஆகாரத்திற்குப் பிறகு கொடுக்கலாம். சர்க்கரை நோயாளிகள் பாலில் கலந்து சாப்பிடலாம்.

சிமெண்ட் விலை உயர்வுக்கு என்ன காரணம் ..? கூட்டுச்சதியா...? சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!சிமெண்ட் விலை உயர்வுக்கு என்ன காரணம் ..? கூட்டுச்சதியா...? சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தாளிசாதி சூரணத்தை 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 250 மில்லி கிராம் எடுத்து தேனில் குழைத்து காலை இரவு ஆகாரத்திற்குப் பிறகு கொடுக்கலாம். 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 500 மில்லி கிராமில் இருந்து ஒரு கிராம் எடுத்து தேனில் குழைத்து ஒரு வேளை ஆகாரத்திற்கு பிறகு கொடுக்கலாம்.

திரிபலா சூரணத்தை மூலம், ஆசனவாய்க் கடுப்பு, ஆசனவாய் அரிப்பு மலக்கட்டு, மலம் கழிப்பதில் சிரமம், மலத்துடன் ரத்தம் வெளியேறுவது போன்ற குறிகுணங்கள் ஏற்படாமல் தடுத்து உடல் சூட்டை தடுத்து உடலை குளிர்ச்சி அடைய செய்கிறது.

திரிபலா சூரணத்தை 1 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு 250 மில்லி கிராம் எடுத்து வெந்நீரில் கலந்து இரவு படுக்கும் போது கொடுக்கலாம். 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 கிராம் வெந்நீரில் கலந்து கொடுக்கலாம்.

வீட்டில் உள்ள அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடல் வலுப்பெற ரத்த சோகை நீங்க, மூட்டுவலி, ஆஸ்துமா, இதய நோய், கண்பார்வை குறைபாடு, ஞாபக சக்தி அதிகரிக்க, இளமையாக இருக்க நெல்லிக்காய் லேகியத்தை 3 வயதிலிருந்து 12 வயது வரை 5 கிராம் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 10 கிராம் இருவேளை ஆகாரத்திற்கு பிறகு சாப்பிட கொடுக்கலாம் என்றும் சித்த மருத்துவர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

English summary
That everyone in the house can boost immunity, strengthen the body, eliminate anemia, joint pain, asthma, heart disease, visual impairment, increase memory, gooseberry 3 to 12 years 5 g for over 12s 10 g may be eaten after meals. Paranoid doctors said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X