"ஆர்எஸ்எஸ் குணம் தெரியுமா! முதல்வரே நினைத்தாலும் பேரணியை தடுக்க முடியாது..!" பரபரத்த சூர்யா சிவா
திருச்சி: ஆர்எஸ்எஸ் பேரணி விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், இது தொடர்பாக பாஜகவின் சூர்யா சிவா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
பாஜகவின் பிசி அணி மாநிலச் செயலாளர் சூர்யாவுக்கு நித்தியானந்தா தர்மரட்சகர் விருதை நித்தியானந்தா அறிவித்து இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பிசி அணி மாநிலச் செயலாளர் சூர்யா சிவா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

நித்தியானந்தா விருது
சூர்யா சிவா கூறுகையில், "இந்து மதத்தையும் பாதுகாக்கும் வகையிலும் இந்து மதத்துக்கு ஆதரவாகவும் பேசிவரும் எனக்கு கைலசாவிலிருந்து சுவாமி நித்தியானந்தா சார்பாக எனக்குத் தர்ம ரக்ஷன விருது காணொலிக் காட்சி மூலமாக வழங்கப்பட்டது. இதில் எனக்கு 100% மகிழ்ச்சி.. திராவிட சித்தாந்தத்தில் இருந்து வந்து பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதத்தைப் பாதுகாத்துப் பேசுவதால் இந்த விருதைக் கொடுத்து உள்ளனர்.

பேச யாரும் இல்லை
பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்து மதத்திற்குச் சாதகமாகப் பேசுவதற்கே விருது கொடுக்கிறார்கள். அதாவது பெரும்பான்மையாக இருந்த போதிலும், இந்து மதம் குறித்துப் பேச யாருமே இல்லை என்பதே உண்மையான நிலையாக உள்ளது. தமிழ்நாட்டில் இப்படியொரு சூழல் தான் நிலவி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்,

முதல்வரே நினைத்தாலும் முடியாது
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தவே கூடாது என்று சில கட்சிகள் கூறி வருவது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், "ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தவே கூடாது என்று நினைக்கலாம்.. ஆனால் 100 சதவீதம் இது நடக்கும்.. யாராலும் தடுக்க முடியாது.. எந்த சூழ்நிலையிலும் ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தே தீரும். திருமாவளவன் அல்ல தமிழக முதலமைச்சரை நினைத்தாலும் தடுக்க முடியாது.

ஆர்எஸ்எஸ் குணம்
தமிழகத்தில் யாரும் ஆர்எஸ்எஸை எதிர்த்துப் பேசுவதில்லை.. பெரிய கட்சிகளான திமுக, அதிமுக, பாமக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக எங்கும் பேசியதாகத் தெரியவில்லை. திருமாவளவன் தன்னை பற்றி ஊடகங்கள் பேச வேண்டும் என்பதற்காக இப்படிப் பேசி வருகிறார். ஆர்எஸ்எஸ் உண்மை குணம் அவருக்கும் தெரியும். இதனால் தான் அவரே 100 ஆண்டுகள் ஆனாலும் ஆர்எஸ்எஸை அழிக்க முடியாது என்கிறார்.

கூட்டணி
கூட்டணியில் அதிக இடங்களைப் பெற அவர் இப்படிப் பேசி இருக்கலாம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நாங்கள் கேட்ட இடங்களை அவர்கள் ஒதுக்கவில்லை. இதனால் கூட்டணியை விட்டுவிட்டுத் தனித்து நின்றோம். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தில் நின்று ஜெயத்துப் பலரும் அமைச்சர்களாக வருவார்கள். தாமரை சின்னத்திலேயே நின்று நிற்போம்" என்று அவர் தெரிவித்தார்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்!












Click it and Unblock the Notifications