திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விதிமீறல்.. திருச்சியில் 92 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க நீதிமன்றம் உத்தரவு

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட 92 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி உயகொண்டான் திருமலையில் செந்தூர் கணேஷ் அப்பார்ட்மெண்ட்ஸ் என்ற பெயரில் 100 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது இந்த குடியிருப்பு கடந்த 2017ஆம் கட்டி முடிக்கப்பட்டு 2 படுக்கை வசதி மற்றும் 3 படுக்கை வசதிகளை கொண்டது.

60 லட்சம் வரை மதிக்கத்தக்க வீடுகள் வெறும் 27 லட்சம் முதல் 35 லட்சம் வரை மிகக் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை வாங்கியவர்கள் சிலர் முழு தொகை கொடுத்து வாங்கியுள்ளனர். ஒரு சிலர் வங்கியின் மூலம் வீட்டுக் கடன் பெற்று வீடுகளை வாங்கி இங்கு வசித்து வருகின்றனர்.

மாஸ் காட்டிய இந்திய ராணுவம்.. லடாக்கில் இந்தூஸ் நதி மீது கட்டப்பட்ட மெகா இரும்புப் பாலம் - வீடியோ மாஸ் காட்டிய இந்திய ராணுவம்.. லடாக்கில் இந்தூஸ் நதி மீது கட்டப்பட்ட மெகா இரும்புப் பாலம் - வீடியோ

குடியிருப்புக் கட்டடம்

குடியிருப்புக் கட்டடம்

இந்த குடியிருப்புக் கட்டடம் பல்வேறு முறைகேடுகள் மற்றும் விதிமீறல் மூலம் கட்டப்பட்டுள்ளன என்று இங்கு இருக்கும் குடியிருப்புவாசிகளுக்கு தெரியவந்துள்ளது. அதுவும் வீடு வாங்கி அங்கு குடியேறிய பிறகுதான் தெரிந்தது. ஆனால், அதனை விற்றவர்கள் "உங்களுக்கு எந்தவித பிரச்சனையும் வராது. அதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்" என தொடர்ந்து நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்து வந்ததாக தெரிகிறது.

2012 ஆம் ஆண்டு இடம்

2012 ஆம் ஆண்டு இடம்

இந்நிலையில் திருச்சி உய்யக்கொண்டான் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ளார். 2012 ஆம் ஆண்டு செந்தூர் பில்டர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ராஜாவிடம் இங்கு அடுக்குமாடி வீடு கட்டுவதற்காக இடம் வழங்கப்பட்டது.

54 ஆயிரம் சதுர அடி

54 ஆயிரம் சதுர அடி

அரசு விதிமுறைகளை படி கட்டுவதற்கான வீட்டின் பிளானும் வழங்கப்பட்டது. ஆனால் அவர் சொன்னதுக்கேற்றார் போல் நடந்து கொள்ளாமல் அப்ரூவல் வழங்கப்பட்ட 54000 சதுர அடியில் வீடுகள் கட்டாமல் 84000 சதுர அடியில் விதிகளை மீறி பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இன்றி இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டியது தெரியவந்துள்ளது.

அப்பாவி மக்கள்

அப்பாவி மக்கள்

உடனடியாக அப்பாவி மக்கள் பாதிக்க கூடாது என்று இதனை தடுத்து நிறுத்த அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

92 வீடுகள்

92 வீடுகள்

அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியும் அதன் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தற்போது இந்த வழக்கில் நீதிபதி ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் 60 வீடு கட்ட வேண்டிய இடத்தில் விதிகளை மீறி 92 வீடுகள் கட்டப்பட்டு விற்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் இதனை ஆரம்பத்தில் இருந்து கண்டு கொள்ளாத காரணத்தினால் தற்போது இந்தக் கட்டடத்தில் விதி மீறி கட்டப்பட்ட பகுதியை இடிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளது.

6 வாரங்களில் காலி செய்ய உத்தரவு

6 வாரங்களில் காலி செய்ய உத்தரவு

இடிக்க வேண்டிய பகுதிகளில் உள்ள குடியிருப்புவாசிகள் 6 வாரங்களில் காலி செய்ய வேண்டும். அதன் பிறகு இரண்டு அல்லது நான்கு வாரங்களில் அப்பகுதியை இடிக்க வேண்டும் என நீதிபதியால் வழங்கப்பட்ட உத்தரவு நகலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்திற்கு ஆதரவாக செயல்பட்ட அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குடியிருப்புவாசிகள் "நாங்கள் பல வருடங்களாக இந்த குடியிருப்பில் இருக்கிறோம். உடனடியாக எங்களால் காலி செய்ய இயலாது. அதற்கு உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே நாங்கள் வெளியேறுவோம் என தெரிவித்துள்ளார்கள்.

English summary
Chennai HC Madurai branch orders to demolish 92 houses illegally built in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X