திருச்சி மாவட்டத்தில் 13 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து நீக்கம். கலெக்டர் சிவராசு தகவல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று முன்னெச்சரிக்கையாக 27 இடங்கள் தடை செய்து தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 13 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதியிலிருந்து தளர்த்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதியில் 14, துவாக்குடி நகராட்சி 1, பேரூராட்சிகளில் 5, ஊரகப்பகுதிகளில் 7 என மொத்தம் 27 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

covid 19: 27 Containment Zones in trichy

திருச்சி மாநகராட்சி பகுதியில் பாளையம்பஜார், தில்லை நகர் 11 வது கிராஸ் பாக்குப்பேட்டை, பொன்மலை பாலாஜி நகர், காஜா நகர், பீமநகர், ஈபி காலனி ஆகிய 6 இடங்களில் மாநகராட்சிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து தளர்த்தப்பட்டுள்ளது.

நகராட்சிப் பகுதியில் உள்ள துவாக்குடியில் 1 இடத்தில் தளர்த்தப்பட்டுள்ளது. ஊரகப்பகுதியில் இலால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மகிழம்பாடி, அன்பில், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஈச்சம்பட்டி, கூத்தூர், முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் கரட்டாம்பட்டி, மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் புத்தாநத்தம் ஆகிய 6 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து தளர்வு செய்யப்பட்டுள்ளது.

covid 19: 27 Containment Zones in trichy

மாநகராட்சி பகுதியில் 6, துவாக்குடி நகராட்சியில் 1, ஊராட்சி ஒன்றியங்களில் 6 என ஆக மொத்தம் 13 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து தளர்வு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தவைர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+