திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை தடுக்க வல்லரசுகளே தடுமாறும் போது தமிழகம் சிறப்பாக கையாளுகிறது - முதல்வர்

கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. கொரோனாவை தடுப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

திருச்சி: கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. கொரோனாவை தடுப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். வல்லரசு நாடுகளே கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க திணறி வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஐசிஎம்ஆர் கூறிய வழிமுறைகளை முறையாக கடைபிடித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய கடன் வசதி கிடைக்க தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

Covid-19 is under control in Tamil Nadu says CM Edappadi Palanisamy

கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக மாவட்டந்தோறும் ஆலோசனை நடத்தி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம், கோவையை அடுத்து திருச்சியில் இன்று காலை ஆலோசனை நடத்தினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.25.53 கோடி மதிப்பிலான பள்ளிக் கல்வித்துறை, சட்டத்துறை, பதிவுத்துறை, வணிகவரித்துறை, மக்கள்நல்வாழ்வுத்துறை கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார்

இதற்காக சேலத்திலிருந்து கார் மூலம் திருச்சிக்கு வருகை தந்த முதல்வரை மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி, முன்னாள் எம்.பி-க்கள் ப. குமார், டி. ரத்தினவேல், ஆவின் சேர்மன் சி. கார்த்திகேயன் உள்ளிட்டோர் மலர்கொத்து அளித்து வரவேற்றனர்.

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொளி காட்சியின் மூலம் ரூ.25.53 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். அரசு சட்டக்கல்லூரியில் ரூ.311.11 லட்சத்தில் கட்டப்பட்ட நூலக கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்தியாவில் அதிதீவிரம்- 24 மணி நேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா- 407 பேர் மரணம் இந்தியாவில் அதிதீவிரம்- 24 மணி நேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா- 407 பேர் மரணம்

ரூ.94.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மண்ணச்சநல்லூர் சார்பதிவாளர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். ரூ..609 லட்சம் மதிப்பில் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு கல்லூரியில் கட்டப்பட்ட பெண்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்தார்.ரூ.1022.14 லட்சம் மதிப்பில் 6 இடங்களில் புதிய வகுப்பறை, ஆய்வகம் மற்றும் கழிப்பறை கட்டடத்தை திறந்து வைத்தார். ரூ.81.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை இயக்குநர் குடும்ப நலத்துறை அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.

ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமயபுரம் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித்துறை, சட்டத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித்துறை, சட்டத்துறை, பதிவுத்துறை, வணிகவரித்துறை, மக்கள்நல்வாழ்வுத்துறை ஆகியவற்றுக்காக கட்டப்பட்டுள்ள ரூ.25.53 கோடி மதிப்பிலான கட்டடங்களை திறந்து வைத்தார். பின்னர், திருச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப் பணிகளை கேட்டறிந்த அவர், குடிமராமத்து பணிகள் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். முக்கொம்பில் நடைபெறும் புதிய கதவணை கட்டும் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், மாநகரக் காவல்துறை மற்றும் மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. கொரோனாவை தடுப்பத்தில் சிறந்த மாநிலம் தமிழகம் என்றார். ஐசிஎம்ஆர் கூறிய வழிமுறைகளை முறையாக கடைபிடித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். வல்லரசு நாடுகளே கொரேனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க திணறி வருகின்றன. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய கடன் வசதி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறினார்.

English summary
Chief Minister Edappadi K Palaniswami today Visited Trichy, CM said, Tamil Nadu is the best state to stop coronation. The Government of Tamil Nadu is taking action in accordance with the instructions of ICMR added CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X