திருச்சியில் 4 தொகுதிகளுக்கு குறி.. கே.என்.நேரு, அன்பில் மகேஷ்க்கு செக் வைக்கும் சிபிஐ, சிபிஎம்!
திருச்சி: அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரின் தொகுதிகளை சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் கேட்க முடிவு எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. சிபிஐ சார்பாக திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளை கேட்கவும், சிபிஎம் சார்பாக திருவெறும்பூர் மற்றும் மணப்பாறை ஆகிய தொகுதிகளை கேட்கவும் தீர்மானம் போடப்பட்டிருக்கிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக கூட்டணி கட்சிகள் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை அடையாளம் கண்டு, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்க தயாராகிவிட்டனர். பிப்ரவரி 22ஆம் தேதி முதல் திமுக தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

சிபிஎம், சிபிஐ
அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் இம்முறை இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் என்று பேசி வருகின்றனர். கடந்த சட்டசபைத் தேர்தலில் இரு கட்சிகளும் தலா 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் மட்டுமே வென்றனர். இதனால் இந்த இரு கட்சிகளுக்கும் கூடுதல் தொகுதி ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
4 தொகுதிகளுக்கு குறி
இதனிடையே திருச்சி மாவட்டத்தில் சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று குறி வைத்திருக்கின்றனர். அந்த வகையில் திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் கூட்டத்தில் திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு கூறி இருக்கிறார்கள்.
கேஎன் நேரு, அன்பில் மகேஷ் தொகுதி
அதேபோல் சிபிஎம் கட்சி மாவட்டக் குழு கூட்டத்தில் மணப்பாறை மற்றும் திருவெறும்பூர் ஆகிய இரு தொகுதிகளையும் கேட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் திருச்சி மேற்கு அமைச்சர் கே.என்.நேருவின் தொகுதியாகும். அண்மையில் பொங்கல் பண்டிகையின் போது தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு செழிப்பாக பரிசுப்பொருட்களை வழங்கி இருந்தார்.
திமுக தலைமை முடிவு என்ன?
அதேபோல் திருவெறும்பூர் தொகுதி அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதியாகும். இவர் தொகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இருந்தாலும் இந்த தொகுதிகளில் சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இரு கட்சிகளுக்கும் கிளை அமைப்பு வரை அடித்தளம் வலுவாக உள்ளது. இதனால் அரசியலில் எதுவும் சாத்தியம் என்ற வகையில் தொகுதிகளை கேட்க தயாராகி இருக்கின்றனர். இதனால் திமுக தலைமை என்ன முடிவு எடுக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications