ஓபிஎஸ்ஸுக்கு 'கிலி' கொடுக்க திட்டம்.. தயாராகும் மத்திய மண்டலம்.. பக்காவா ஸ்கெட்ச் போட்ட ஈபிஎஸ் டீம்!
திருச்சி : அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி வரவிருப்பதையொட்டி, அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
அதிமுகவில், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கிடையேயான மோதல் காரணமாக, யாருக்கு செல்வாக்கு அதிகம் என்ற அதிகாரப்போட்டி நிகழ்ந்து வருகிறது.
இதனால், இருவரும் செல்லும் இடங்களில் எல்லாம், பலத்தைக் காட்டும் வகையில் அவர்களது ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டி வருகின்றனர்.
அந்தவகையில் நாளை திருச்சி வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஈபிஎஸ் திருச்சி வருகை
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி வரவுள்ளார். அதிமுக மோதலுக்குப் பிறகு முதல்முறையாக திருச்சி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 10 மணி அளவில் திருச்சி வந்தடைகிறார்.

திருச்சியில் ஆலோசனை
திருச்சி விமான நிலையம் முன்பு வயர்லெஸ் ரோடு பகுதியில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். பின்னர் திருச்சியில் தனியார் ஹோட்டலில் தங்கும் எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் இல்ல திருமணம்
முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில இளைஞரணி செயலாளருமான என்.ஆர்.சிவபதி இல்ல திருமண விழா நாளை மறுநாள் திருச்சியில் நடைபெறுகிறது. முன்னதாக நாளை மாலை, இந்த திருமண வரவேற்பு விழா திருச்சியில் நடக்கிறது. இதில் பங்கேற்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பின்னர், இரவு 8.30 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்குப் புறப்படுகிறார்.

சிறப்பான ஏற்பாடுகள்
அதிமுக மோதலுக்குப் பிறகு முதல் முறையாக திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமியை பிரமாண்டமாக வரவேற்க முன்னாள் எம்.பி.யும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் ஏற்பாடுகளை செய்து வருகிறார். பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி மேற்பார்வையிட்டு வருகிறார். மத்திய மண்டலத்தில் தங்கள் பலத்தைக் காட்டும் வகையில், ஈபிஎஸ் ஆதரவாளர்கள், பெரும் கூட்டத்தைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டம் திரளணும்
முன்னாள் அமைச்சர் சிவபதி இல்லத் திருமண விழாவில் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, சிவபதி இல்ல திருமண வரவேற்பில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மாஸ் காட்டுவதற்காக இந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டராம்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications