உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா?
திருச்சி: திருச்சி நேற்று திமுகவின் மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அமைச்சர் கேஎன் நேரு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மதிக்கவில்லை. மேடையில் உள்ள திமுகவின் மூத்த தலைவர்களுக்கு துண்டு அணிவித்த கேஎன் நேரு, உதயநிதி ஸ்டாலின் எழுந்து நின்றும் கூட புறக்கணித்தார் என்று வீடியோக்கள் பரவி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. மேடையில் என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வகையில் திமுக தனது பணிகளை விரைவுப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தான் திருச்சியில் நேற்று திமுகவின் மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு மேற்கொண்டு இருந்தார்.
திருச்சி மாநாடு
முதல்வர் ஸ்டாலின் மாநாட்டில் பங்கேற்று பேசினார். துணை முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட மாநிலம் முழுவதும் இருந்து திமுகவினர்கள் ஏராளமானவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று பரவி சர்ச்சையை கிளப்பி வருகிறது.
துண்டு அணிவதில் சர்ச்சை
அந்த வீடியோவில் மேடையில் முதல்வர் ஸ்டாலின், டிஆர் பாலு, திருச்சி சிவா, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆ ராசா, கனிமொழி உள்பட பல தலைவர்கள் உள்ளனர். ஒவ்வொருவரின் கழுத்திலும் அமைச்சர் கேஎன் நேரு துண்டு அணிவித்து வரவேற்கிறார். திருச்சி சிவா - ஆ ராசா ஆகியோருக்கு இடையே உதயநிதி ஸ்டாலின் அமர்ந்து இருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் புறக்கணிப்பு
திருச்சி சிவாவிற்கு, கேஎன் நேரு துண்டு அணிவித்தார். இதையடுத்து தனக்கு துண்டு அணிவிப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்கிறார். ஆனால் கேஎன் நேரு உதயநிதி ஸ்டாலினை விட்டுவிட்டு அடுத்ததாக இருக்கும் ஆ ராசாவின் கழுத்தில் துண்டை அணிவித்தார். இதையடுத்து சில வினாடிகள் நின்ற உதயநிதி ஸ்டாலின் தனது இருக்கையில் அமர்ந்தார்.
பரவும் வீடியோ
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, அமைச்சர் கேஎன் நேரு மதிக்கவில்லை. அவருக்கு துண்டு அணிவித்து வரவேற்க கேஎன் நேரு மறுத்துவிட்டார். இருவருக்கும் பிரச்சனை உள்ளது என்ற தகவல்கள் பரப்பி வருகின்றனர். இதனால் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
என்ன நடந்தது?
ஆனால் உண்மையில் உதயநிதி ஸ்டாலினை, கேஎன் நேரு வரவேற்றார். மாநாட்டின் தொடக்கத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மஞ்சள் நிற துண்டும், செங்கோல் ஆகியவற்றை கேஎன் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் வழங்கினர். அதன்பிறகு இரண்டாவதாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் செங்கோல் வழங்கினார்.

இதையடுத்து கேஎன் நேரு, உதயநிதி ஸ்டாலினின் கழுத்தில் மஞ்சள் நிற துண்டு அணிவித்து வீரவாளை வழங்கினார். அதன்பிறகு தான் பிற தலைவர்களுக்கு கேஎன் நேரு துண்டு அணிவித்தார். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு துண்டு அணிவித்ததால் 2வது முறையாக உதயநிதி ஸ்டாலினுக்கு, கேஎன் நேரு துண்டு அணிவிக்கவில்லை. ஆனால் இதனை பலநரும் தவறாக பரப்பி வருகின்றனர்.
-
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications