Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் கே.என்.நேரு மகன் பிறந்தநாள்! ஸ்டாலினிடம் பவ்யமாக வாழ்த்து! அதகளப்படுத்திய ஆதரவாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, தனது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பவ்யமான முறையில் வாழ்த்துப் பெற்றிருக்கிறார்.

இதனிடையே திருச்சியில் திரும்பிய பக்கமெல்லாம் சுவரொட்டிகள், பேனர்கள் வைத்து தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில், அதகளப்படுத்தியிருக்கிறார்கள் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள்.

திமுகவை பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலினை தான் சின்னவர் என்ற அடைமொழியோடு அழைக்கும் வழக்கம் உண்டு. இந்நிலையில் எங்களின் சின்னவரே என அமைச்சர் நேரு மகனை புகழ்ந்து புளங்காகிதம் அடைந்திருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

அமைச்சர் நேரு மகன்

அமைச்சர் நேரு மகன்

அமைச்சர் நேருவின் மகன் அருண் நேருவை பொறுத்தவரை சென்னையில் தொழிலதிபராக இருந்து வருகிறார். தனது சித்தப்பாக்களோடு சேர்ந்து தொழில்களை கவனித்து வரும் அவரை, அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் வம்படியாக அரசியலுக்குள் இழுத்து விட்டுள்ளனர். அவரும் ஆதரவாளர்களின் அன்புத் தொல்லையை ஏற்று திருச்சியில் அதிக நாட்கள் தங்கத் தொடங்கியிருப்பதுடன் கட்சிக்காரர்கள், ஆதரவாளர்கள் இல்ல விழாக்களில் தலைக்காட்ட ஆரம்பித்துள்ளார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இந்நிலையில் அருண் நேருவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் போஸ்டர்கள், விளம்பர பேனர்களால் திருச்சி மாநகரையே அவரது ஆதரவாளர்கள் திணறடித்துவிட்டனர். மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக உதயநிதியின் அடைமொழியான சின்னவர் என்ற வார்த்தையை அருண் நேருவுக்கு சூட்டி மகிழ்ந்திருந்தனர் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள். முதன்மையின் முத்தே, திருச்சியின் எம்.பி.யே என மனதில் பட்டத்தையெல்லாம் பேனர்களில் பிரசுரித்து விசுவாசத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

தில்லை நகர்

தில்லை நகர்

திருச்சி தில்லை நகர் அலுவலகத்தில் கட்சிக்காரர்களின் வாழ்த்தை பெற்றுக்கொண்ட அருண் நேரு, அதன்பிறகு சென்னை புறப்பட்டுச் சென்று தனது தந்தை நேருவிடம் வாழ்த்து பெற்றார். கையோடு அவரை அழைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தற்போது திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத இவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி அல்லது பெரம்பலூர் தொகுதியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் முன்னுதாரணம்

முதல்வர் முன்னுதாரணம்

பேனர்கள் வேண்டாம், விளம்பரப் பதாகைகள் வேண்டாம் என முதலமைச்சரே ஆடம்பரங்களை தவிர்த்து வரும் சூழலில், அவரை முன்னுதாரணமாக கொண்டு அருண் நேருவும் ஆடம்பர பிறந்தநாள் விளம்பரங்களுக்கு தடை போட்டிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+