நான் அப்படி சொல்லவே இல்லை.. ஊடகங்கள் தவறாக திரித்துவிட்டன.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
திருச்சி: நான் கூறியதை ஊடகங்கள் தவறாக திரித்து சித்தரித்து விட்டன என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் தன்நிலை விளக்கமளித்தார்.
Recommended Video
திருச்சி இபி சாலையில் முஸ்லிம் மகளிர் சங்க பயனாளிகளுக்கு மேம்பாட்டிற்கான நிதி உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டார்.

வரும் திங்கள், செவ்வாய் ,புதன் ஆகிய மூன்று தினங்களும் அனைத்து அமைச்சர்கள் சென்னையில் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதாக தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த பேச்சு ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து
தென்னூரில் உள்ள தனது அலுவலகத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து தன்னிலை விளக்கம் அளித்தார். அதில் முதல்வர் உத்தரவு குறித்து தான் கூறிய கருத்துக்கள் ஊடகங்களில் திரித்து கூறப்பட்டுள்ளது.
இந்த கொரோனா காலத்தில் திங்கள் ,செவ்வாய், புதன் ஆகிய மூன்று தினங்களும் அமைச்சர்கள் சென்னையில் இருந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். அதை தான் நான் குறிப்பிட்டேன்.

ஆனாலும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதை ஒட்டி இந்த மூன்று தினங்களும் அமைச்சர் பெருமக்கள் சென்னையில் இருக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதாக திரித்து கூறப்பட்டுள்ளது. நான் அவ்வாறு குறிப்பிடவில்லை என்றார்.
மேலும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என கூறினார்.
-
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications