செம "ஹஸ்கி"... பேசி பேசியே சொக்க வைத்த அனுசுயா.. "மயங்கி" விழுந்த மருதுபாண்டி.. அடப் பாவமே!
முகநூல் மூலம் மோசடி செய்து ஒரு பெண் பணம் பறித்துள்ளார்
திருச்சி:இனிக்க இனிக்க பேசும் அனுசுயாவின் குரலை கேட்டதுமே மயங்கி விழுந்துவிட்டார் மருதுபாண்டியன்.. இறுதியில் அவருக்கு அனுசுயா வைத்த ஆப்புதான் ட்விஸ்ட்!
திருச்சியை சேர்ந்தவர் மருதுபாண்டியன்.. 30 வயதாகிறது.. எப்ப பார்த்தாலும் ஃபேஸ்புக்கிலேயே விழுந்துகிடப்பவர்.. யாராக இருந்தாலும் சேட்டிங் செய்து கொண்டிருப்பார். அதிலும் பெண்கள் போட்டோக்களை பார்த்துவிட்டால் சற்று, ஓவர் டியூட்டிதான்,. உடனே அவர்களுக்கு ரிக்குவஸ்ட் தந்து லிஸ்ட்டில் சேர்த்துவிடுவார்.
ஒருநாள் அப்படித்தான் பெண் ஒருவரின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பார்த்தார்.. அந்த பெண் பேரழகியாக இருக்கவும், உடனே அவருக்கும் வழக்கம்போல நட்பு அழைப்பு விடுத்தார்.. அந்த பெண்ணின் பெயர் அனுசுயா.. அவரும், ரிக்குவஸ்ட் பார்த்ததுமே இவரது நட்பை ஏற்றுக் கொண்டார்.

மருதுபாண்டியன்
அப்போதுதான் அந்த பெண், தன்னுடைய போன் நம்பரையும் ஃபேஸ்புக்கில் ஓபனிலேயே எல்லாரும் பார்க்கும்படி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மருதுபாண்டியனும் அந்த நம்பருக்கு போன் செய்து பேசினார்.. அனுசுயா தான் போனை எடுத்து பேசினார்.. அவர் குரலை கேட்டதும் மேலும் சொக்கி விழுந்தார் மருதுபாண்டியன்... அதுமட்டுமல்ல.. லவ் டயலாக்குகளை அனுசுயா பேசவும், மிரண்டு போய்விட்டார்.

பணம்
அதனால், அந்த மருதுபாண்டியனோ, தனக்கு கல்யாணம் ஆனதையே அனுசுயாவிடம், மறைத்துவிட்டு ஜொள்ளுவிட்டுக் கொண்டு பேசி கொண்டிருந்தார்... நாள் ஆக ஆக, இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அனுசுயா, மருதுபாண்டியனிடம் பணம் கேட்க ஆரம்பித்தார்.. மருதுபாண்டியனும் அனுசுயா தன்னைவிட்டு போய்விடக்கூடாது என்பதற்காக கேட்கும்போதெல்லாம் பணத்தை அனுப்பி வைத்தார்.. இப்படியே 3 லட்சம் ரூபாய் வரை பணம் தந்தாராம் மருதுபாண்டியன்.

காஸ்ட்லி கிப்ட்
ஒருநாள் அனுசுயா பைத்தியம் மருதுபாண்டியனுக்கு அதிகமாகிவிட்டது.. அதனால், அவருக்கு சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் என்பதற்காக, காஸ்ட்லி கிப்ட்களை வாங்கி கொண்டு, அனுசுயாவின் அட்ரஸை தேடி கண்டுபிடித்து கொண்டு அவர் வீட்டுக்கு சென்றார்.. முதல்முறையாக அனுசுயாவை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் மருதுபாண்டியன் குதூகலத்துடன் அந்த வீட்டு கதவை தட்டினார்.. அனுசுயா கதவை திறந்தார். அப்போதுதான், தெரிந்தது, ஃபேஸ்புக்கில் பார்த்த பெண் அவர் கிடையாது என்று!

அதிர்ச்சி
கதவை திறந்தது நடுத்தர வயதுடைய ஒரு பெண்.. அவர்தான் அனுசுயா.. போனில் இனிக்க இனிக்க பேசியதும் இவர்தான்.. ஆனால் ஃபேஸ்புக்கில் இருக்கும் போட்டோ மட்டும் வேறு ஒரு பெண்ணுடையது.. நிஜமான அனுசுயாவுக்கு 40 வயதுக்கு மேல் இருக்கும்.. நேரில் பார்த்ததும், தன் காதல் கனவு நொறுங்கிபோய் உட்கார்ந்து விட்டார் மருதுபாண்டியன்.. பிறகு, பிறகு தன்னை மோசடி செய்து 3 லட்சம் பணம் பறித்த அனுசுயா மீது போலீசில் புகார் தந்தார்.

புகார்
போலீசாரும் விசாரித்தபோதுதான் தெரிந்தது, அனுசுயாவை இப்படி பேச வைத்து, பணம் கறந்தது அவரது சொந்த தம்பியும், கணவரும்தான் என்பதை அறிந்து அதிர்ந்தனர்.. அழகான பெண்களுடன் பழகி, அவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொள்வாராம் அனுசுயா... பிறகு அந்த போட்டோவில் இருப்பது தான் தான் என்று சொல்லி ஃபேஸ்புக்கில் பழகும் இளைஞர்களிடம் பணம் பறிப்பாராம். இதையடுத்து, அக்கா, தம்பி, கணவர் என 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்

இளம்பெண்
இதனிடையே, ஃபேஸ்புக்கில் தன்னுடைய போட்டோவை பதிவிட்டு அவமானப்படுத்திவிட்டதாக, சம்பந்தப்பட்ட இளம்பெண் பிரியா என்பவர் அனுசுயா மீது போலீசில் புகார் தந்துள்ளாராம்.. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி மேட்டுதெருவை சேர்ந்தவர் சுகுமாரின் மகள்தான் இந்த பிரியா.. அரசு கல்லூரியில் பிகாம் 2ம் வருடம் படித்து வருகிறார்.. இவர் போட்டோவைதான் அனுசுயா பதிவிட்டிருந்தார்.. இது சம்பந்தமான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வந்தாலும், காதல் ரசம் சொட்ட சொட்ட பேசிய இளைஞர், அனுசுயா தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளியே வரவில்லையாம்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications