மர்மமான முறையில் இறந்த 30 மான்கள்... திருச்சியில் போலீசார் விசாரணை!
திருச்சி: திருச்சி அருகே பெல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் 30 மான்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பு வளாகத்தில் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் உள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்ட மான்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாக இங்கு வளர்க்கப்பட்டு வரும் மான்கள் மர்மமான முறையில் திடீர், திடீரென இறந்து வந்தன. இதுவரை 30 மான்கள் வரை இறந்துள்ளன. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை.

மான்கள் சுருண்டு இறந்த தகவல் அறிந்த திருச்சி வனத்துறை மற்றும் திருவெறும்பூர் கால்நடைத்துறை அதிகாரிகள் அங்கு வந்து மான்களின் உடல்களை மீட்டு உடல் பரிசோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பருவநிலை மாற்றத்தால் மான்கள் இறந்ததா? அல்லது விஷ பூச்சிகள் கடித்ததால் இறந்ததா? என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷச்செடிகளை சாப்பிட்டதால் இறந்ததா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மான்களின் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்புகள் சேர்ந்ததால் அவை மூச்சு விட முடியாமல் இறந்ததாகவும் சொல்லப்படுவதால் இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மான்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் மான்களின் இறப்புக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும். இதனிடையே பூங்கா பகுதியில் நேரில் விசாரணை நடத்திய வனத்துறை அதிகாரி சுஜாதா, மான்கள் உணவில் விஷம் கலந்திருந்ததா? அல்லது உணவு ஒவ்வாமையால் இறந்தனவா என்ற கோணத்தில் உண்மையை கண்டறிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications