திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பா என்னை விட்டு போய்ட்டீங்களே! உறவினர்கள் முன் புரண்டு அழுத மகன்! அப்பறம் நடந்தது தான் ட்விஸ்டே!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி அருகே, பெற்ற தந்தையை கொலை செய்துவிட்டு, ஒன்றும் தெரியாததுபோல், அவரின் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்த மகனை, போலீசார் கைது செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகரம் தென்னூரில் உள்ள சின்னச்சாமி நகரை சேர்ந்த முருகன் என்பவர், முறுக்கு சுடும் 'தொழில் செய்து வந்துள்ளார். இவரின் மனைவி சாந்தி. இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவருடய மூத்த மகன் விஜயகுமார், லோடு மேனாக பணியாற்றி வருகிறார்.

மது போதைக்கு அடிமையான முருகன், தினந்தோறும் மது அருந்தி விட்டு, குடும்பத்தில் உள்ளவர்களிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து 1.29 லட்சம் கன அடிநீர் திறப்பு-காவிரி கரையோர மக்களுக்கு வார்னிங்திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து 1.29 லட்சம் கன அடிநீர் திறப்பு-காவிரி கரையோர மக்களுக்கு வார்னிங்

மதுபோதையில் ரகளை

மதுபோதையில் ரகளை

மேலும், குடும்ப உறுப்பினர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவது, அடிப்பது என தொடர்ந்து தொந்தரவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இதேபோல், இரவில் மது அருந்தி விட்டு, வீட்டில் தகராறு செய்துள்ளார். அப்போது அவருடைய மகன் விஜயக்குமார் தந்தையை கண்டிந்துள்ளார். விஜயக்குமாரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மகன் தந்தையை திட்டவும் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

தந்தையை கொன்ற மகன்

தந்தையை கொன்ற மகன்

இதில் கோபமடைந்த விஜயக்குமார், தந்தையை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயக்குமார், வீட்டின் அருகில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகே, தந்தையில் உடலை போட்டு விட்டு வீடு திரும்பியுள்ளார். இதனிடையே முருகன் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த குடும்ப உறுப்பினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

இறுதிச் சடங்கு ஏற்பாடுகள்

இறுதிச் சடங்கு ஏற்பாடுகள்

தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த விஜயக்குமாரும், ஒன்றும் தெரியாதுபோல, குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து தந்தையை தேடுவது போல் நடித்துள்ளார். ஆற்றின் அருகே மயங்கி விழுந்து கிடந்த முருகனை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முருகன் உடலை வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். இயற்கையாக இறந்ததாக போலவே சொந்த பந்தங்களுக்கு தகவல் தெரிவித்து, இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தார் செய்துள்ளனர்.

 போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இது குறித்து தில்லை நகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் முருகன் வீட்டிற்கு வந்த காவல் துறையினர், முருகன் மரணம் குறித்து விஜயக்குமாரிடம் விசாரணை செய்ததில் அவர் தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதனையடுத்து முருகனின் உடலை பிரதே பரிசோதனைக்காக காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்த மகன் விஜயக்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர். மது போதையில் தகராறு செய்த தந்தையை, மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The incident of police arresting the son who arranged for his father's funeral after concealing the murder of his father near Trichy has caused a great shock.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X