தமிழகத்தின் இதயம்.. திருச்சி 2-வது தலைநகராக வரவேண்டும்.. எம்ஜிஆர் விரும்பிய திட்டம் -திருநாவுக்கரசர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என திருநாவுக்கரசர் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி தமிழகத்தின் இதயம் போன்றது என்றும் பூகோள ரீதியாக மாநிலத்தின் மையப்பகுதியாக திகழ்வதால் திருச்சி தான் 2-வது தலைநகரத்திற்கு சரியான இடம் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

திருச்சி

திருச்சி

சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் சாலைகளில் நெருக்கடியை கருத்தில் கொண்டு திருச்சி 2-வது தலைநகராக உருவாக்குவேன் என எம்.ஜி.ஆர். அறிவித்ததாகவும், அதற்குள் அவருடைய உடல்நிலை நலிவுற்றதால் அவரது விருப்பம் நிறைவேறாமல் போனதாகவும் கூறியுள்ளார். தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் சுமார் 4 மணி நேர பயணத்தில் திருச்சியை அடைந்துவிடலாம் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கட்டிடங்கள்

கட்டிடங்கள்

மக்கள் எளிதாக வந்து செல்லக்கூடிய வகையில் இனிமேல் கட்டப்படவுள்ள அரசுத்துறை கட்டிடங்கள் அனைத்தும் திருச்சியில் கட்டவேண்டும் எனவும் திருச்சியில் தண்ணீர் வசதி, விமான வசதி, ரயில்வே வசதி,, இட வசதி என அனைத்தும் திருச்சியில் தாராளமாக உள்ளது என்றும் திருநாவுக்கரசர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பூகோள ரீதியாக

பூகோள ரீதியாக

அரசியலை கடந்து பூகோள அமைப்பின் அடிப்படையில் மக்கள் வசதியை மனதில் கொண்டு தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சியை தேர்வு செய்து முதலமைச்சர் பணிகளை தொடங்கினால் மக்கள் வரவேற்பார்கள் எனக் கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இது தனது கனிவான வேண்டுகோள் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர்

திருச்சியை தலைநகராக்க வேண்டும் என அதிமுக நிறுவனரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் விருப்பத்திற்கு நேரெதிராக மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் அமைச்சர் உதயகுமார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திருநாவுக்கரசர் திருச்சியை 2-வது தலைநகராக்க கோரிக்கை எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+