திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாழ்ந்தா உன்னோடு மட்டுமே வாழுவேன்! செல்ஃபி எடுத்து திருநங்கையை மடக்கிய போலீஸ்! நகை பணத்துடன் எஸ்கேப்!

Google Oneindia Tamil News

திருச்சி : கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் திருநங்கையுடன் செல்பி எடுத்த காவலர் திருநங்கையை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரை அடித்து துன்புறுத்தி நகை பணத்தைப் பறித்துக் கொண்டு ஏமாற்றி சென்றதால் பாதிக்கப்பட்ட திருநங்கை, அந்த காவலர் பணியாற்றும் சிறப்பு காவல் படை அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது..

திருச்சி மாவட்டம் மருங்காபுரி பகுதியைச் சேர்ந்தவர் பபிதா ரோஸ் திருநங்கையானை இவர் சமூகப் பணிகளில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அங்கு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யும் பணியை செய்து வந்தார். அப்பொழுது கடலூர் மாவட்டம் குமராட்சியைச் சேர்ந்த கார்த்திக் என்ற காவலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கவுன் பனேகா குரோர்பதி சீசன் 14.. ரூ 1 கோடியை வென்றார் பிளஸ் 2 படித்த குடும்பத் தலைவி கவிதா சாவ்லா கவுன் பனேகா குரோர்பதி சீசன் 14.. ரூ 1 கோடியை வென்றார் பிளஸ் 2 படித்த குடும்பத் தலைவி கவிதா சாவ்லா

சிறப்பு காவலர்

சிறப்பு காவலர்

உணவு பரிமாற்றிய பொழுது பபிதாவின் செல்போன் என்னை பெற்றுக்கொண்ட காவலர் கார்த்திக் திருவிழா முடிந்த பின்பு அடிக்கடி பவிதாவுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி உள்ளார். அப்பொழுது இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் பபிதாவை திருமணம் செய்து கொள்வதாக காவலர் கார்த்திக் கூறியுள்ளார். ஏற்கனவே தான் இருமுறை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றம் அடைந்ததாகவும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார். அதற்கு பபிதா மறுப்பு தெரிவித்ததாகவும் பின்னர் பேசி சம்மதம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

 திருநங்கையுடன் திருமணம்

திருநங்கையுடன் திருமணம்

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி பபிதா தனது வீட்டில் வைத்து நூறு பேருடன் உறவினர்களின் முன்னிலையில் காவலர் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் கார்த்திக் பபிதா இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். அந்த காலகட்டத்தில் பபிதா உதவியோடு கார்த்திக் தந்தை பெயரில் நிலம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது அங்கு விசாரிக்கும் பொழுது தான் காவலர் கார்த்திகிற்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிய வந்தது. அதன் பின்பு சில நாட்கள் கார்த்திக் தன்னுடன் கணவனாக வாழ்ந்த நிலையில் இரவு பத்தாம் தேதி வீட்டிற்கு வந்த நிலையில் 11-ம் தேதி அதிகாலை 4-00மணிக்கு பவிதாவை வீட்டில் இருந்த கட்டிலில்கட்டிப்போட்டு விட்டு வாயில் துணியை அடைத்து போட்டார்.

பணம் நகை

பணம் நகை

இதனால் திக்கு முக்காடிய பபிதா சத்தம் போட்ட நிலையில் அருகில் இருந்த வீட்டினர் அவரை மீட்டனர். அப்பொழுது நடந்த சம்பவத்தை பபிதா அங்கு இருந்தவர்களிடம் கூறியதோடு விசாரணைக்கு வந்த போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அப்பொழுது போலீசார் நடத்தி விசாரணையில் பபிதா வீட்டில் வைத்திருந்த 110 சவரன் தங்க நகை 4 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை காவலர் கார்த்திக் எடுத்துச் சென்றதாக கூறிய பபிதா தான் வைத்திருந்த செல்போன், ஏடிஎம் கார்டு மற்றும் கைப்பை உள்ளிட்டவற்றையும் எடுத்துச் சென்றதாக கூறினார். மேலும் உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பபிதா அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

 பரபரப்பு புகார்

பரபரப்பு புகார்

இந்நிலையில் அவரிடம் புகார் மனுவை பெற்றுக் கொண்டதற்கான மனு ஏற்பு ரசீது காவல்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவலர் கார்த்திக் பபிதாவின் செல்போனில் இருந்த புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதாக புகார் மனுவை உளுந்தூர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை பத்தாம் அணியின் கமாண்டரிடம் வழங்கி உள்ளார். அதைப் பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரி விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

English summary
A complaint has been lodged with the higher authorities against the constable for marrying a transgender woman near Trichy and then beating her and taking her jewelry money and cheating her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X