புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின்
திருச்சி: நான் சேலஞ்ச் செய்து சொல்கிறேன்.. திமுகவும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் இருக்கும் வரை தமிழ்நாட்டை பாஜக ஆளவே முடியாது.. நீங்க அந்தர்பல்டி அடித்தாலும், என்ன முகமூடி போட்டு வந்தாலும், புதுசு புதுசாக யாரை கூட்டிட்டு வந்தாலும், எத்தனை ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டினாலும் பாஜவுக்கு தமிழ்நாடு எப்போதுமே அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான் என ஸ்டாலின் பேசினார்.
திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை யாரலும் நிறுத்த முடியாது. தேர்தல் அறிக்கைக்கு கண்டெண்ட் கொடுக்கிறதே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்.

பாஜகவுக்கு நோ சொல்வார்கள்
நமது திட்டங்களை காப்பியடித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிடுகின்றன. திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளோம். திமுக அரசின் திட்டங்கள் இருக்கும் வரை நான் தான் தமிழகத்தை ஆள்கிறேன். எங்க மன்ணில் நாங்கதான் ஜெயிப்போம். நாங்க மட்டும்தான் ஜெய்ப்போம். கூட்டணிக்கு பெயர் வைக்க முடியாத நிலையில்தான் அதிமுக உள்ளது.
தேர்தல் நேரத்தில் கூட தமிழ்நாட்டுக்கு திட்டங்களை தர பாஜகவுக்கு மனமில்லை. திட்டமிட்டு தமிழ்நாட்டை புறக்கணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எப்படி மக்கள் வாக்களிப்பார்கள். தமிழ்நாடு கேட்பதற்கு எல்லாம் நோ சொல்லும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்களும் நோ சொல்வார்கள்.
அதிமுகவை விழுங்குகிறது
அதிமுக என்ற முகமூடியை போட்டுக்கொண்டு வந்தால் எங்களுடைய தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களை அடையாளம் தெரியாமல் போய்விடுமா.. உங்களுடைய முகத்திரை கிழித்து தமிழக மக்களிடம் நாங்க அம்பலப்படுத்துவோம்.
தமிழ்நாட்டை எப்படியாவது விழுங்கிவிடலாம் என நினைக்கிறது காவிக் கூட்டம்.. எங்க கருப்பு சிவப்பு படை இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது.. உங்க அப்பனே வந்தாலும் அது நடக்காது.. நடக்கவே விடமாட்டோம்.. இது அவர்களுக்கு நல்லா தெரியும்.. அதனால் தான் அவர்கள் அதிமுக என்ற கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குகிறார்கள்..
தன் சுயநலத்திற்காக
அரசியலில் நேர் எதிரியாக இருந்தாலும் அதிமுக தொண்டர்கள் மீது உண்மையாகவே நாங்கள் பரிதாப்படுகிறோம்.. அவர்கள் உணர்வுக்கு மாறாக கட்சியை கொண்டு போய் டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி.. தன் சொந்த நலனுக்காக, சுயநலத்திற்காக எப்படியவது முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் பாஜகவிடம் அடிமையாக கிடக்கிறார்.
இதனை வைத்து ஒட்டுமொத்த அதிமுகவையும் அழிக்கின்ற வேலையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இப்போதுகூட பீகாரில் என்ன நடக்கிறது என்பதை நாடே பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.. பீகாரில் இதுவரை பாஜக முதல்வர் இருந்ததே கிடையாது..
சேலஞ்ச் செய்து சொல்கிறேன்
நிதிஷ் குமாரை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு, இப்போது காரியம் கைகூடியதும் அவரை ஓரம் கட்டிவிட்டு பாஜக முதல்வரை உள்ளே கொண்டு வருகிறார்கள். இதையே தான் தமிழ்நாட்டிலும் செய்யப் பார்க்கிறது... நான் அடித்து சொல்கிறேன்.. ஸ்டாலின் இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆளவே முடியாது..
சேலஞ்ச் செய்து சொல்கிறேன்.. திமுகவும், ஸ்டாலினும் இருக்கும் வரை தமிழ்நாட்டை பாஜக ஆளவே முடியாது.. நீங்க அந்தர்பல்டி அடித்தாலும், என்ன முகமூடி போட்டு வந்தாலும், புதுசு புதுசாக யாரை கூட்டிட்டு வந்தாலும், எத்தனை ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டினாலும் பாஜவுக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்.. என்று பேசினார்.












Click it and Unblock the Notifications