திருச்சியில் திமுக மெயின் பிக்சர்.. 10 லட்சம் பேருடன் பிரமாண்ட மாநாடு.. ஸ்டாலின் செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அரசு ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மண்டலம் வாரியாக திமுக மாநாடுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் மதுரையில் நடந்த தெற்கு மண்டல மாநாட்டில் பேசிய ஸ்டாலின், இது சும்மா டிரெய்லர் தான். திருச்சியில் மெயின் பிக்சர் காட்டுவோம் என்று தங்களின் திட்டத்தை பற்றி விவரித்துள்ளார்.

மதுரை தென் மண்டல வாக்குச்சாவடி பாக முகவர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், "மண்டல வாரியாக மாநாடு நடத்தியுள்ளோம். மதுரையில் சித்திரைத் திருவிழா போல திமுகவினர் கூடியுள்ளனர். 75,032 முகவர்கள் இங்கு வந்துள்ளனர். மொத்தம் 7 லட்சம் முகவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். வருகிற 27 ஆம் தேதி மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

trichy-dmk-maanaadu-this-is-just-trailer-main-picture-waiting-in-trichy-dmk-maanaadu-said-mk-stalin

எல்லா பக்கமும் கருப்பு சட்டை

மதுரையில் மொத்தம் 1.5 லட்சம் முகவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளோம். கடந்த 2 மாதங்களில் 7 மாநாடுகள் நடத்தி 9 லட்சம் பேரை சந்தித்து பேசியுள்ளேன். நம்மை போல பூத் அளவில் மகளிர், நிர்வாகிகள் என தேர்தலுக்கு ஆயத்தமான கட்சியை இந்தியளவில் காட்ட சொல்லி சவால் விடுகிறேன். அது முடியவே முடியாது. திமுக மக்களிடம் இருந்து உருவாகியுள்ளது. பெரியார், அண்ணா, கலைஞரின் ரத்தம். நம்மை தொட்டு பார்த்தால் தமிழ்நாடே சீண்டும் என்கிற பயம் உள்ளது.

இது வெறும் டிரெய்லர் தான். மார்ச் 9 ஆம் தேதி திருச்சியில் மெயின் பிக்சர் காட்டவுள்ளோம். அந்த ஒரு மாநாட்டில் 10 லட்சம் பேரை கூடுவார்கள். மொத்தமாக 3 மாதங்களில் சுமார் 15 மாநாடுகள் நடத்தி 20 லட்சம் மக்களை சந்திக்கவுள்ளேன். நாம் ஒரு ரெக்கார்ட் செய்தால் அதை யாராலும் முறியடிக்க முடியாது. எந்த பக்கம் திருப்பினாலும் கருப்பு சிவப்பு நிறம் தான் தெரிகிறது. நம் திட்டங்களைப் பற்றி தான் பேசுகிறார்கள். இதுதான் கள நிலவரம்.

பக்கா பிளான்

தெற்கு சீமையை தட்டித் தூக்க வேண்டும். அதற்கு தயாரா. இந்த காலகட்டத்தில் மக்கள் கேட்ட திட்டங்களுடன், கேட்காத திட்டங்களையும் சர்ப்ரைசாக கொடுத்துள்ளோம். எஸ்ஐஆர் பணிக்கும் தேர்தலுக்கும் இடைவெளி இல்லை. இருப்பினும் நாம் தனித்து ஆட்சியமைப்போம் என்பதில் மாற்று இல்லை. மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறேன். எல்லாவற்றையும் பக்காவாக பிளான் செய்துள்ளோம்.

ஒவ்வொரு பூத்திற்கும் 350 வாக்குகளை எடுத்தால், அசால்டாக 2.60 கோடி வாக்குகளை பெற்றுவிடுவோம். வெற்றி உங்கள் பொறுப்பு. உங்களுக்கு தேவையானதை செய்வது உங்கள் பொறுப்பு. 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் லட்சியம். உங்களுக்கும், எனக்கும் நோ ரெஸ்ட். ரிப்பீட் மோடில் மக்களை சந்தித்து பேச வேண்டும். அப்போதுதான் நம் வெற்றி ரிப்பீட் ஆகும்.

திமுக திட்டங்கள்

எப்போதும் மக்கள் தான் நம் எஜமானர்கள். அதனால் மக்களிடம் கனிவாக பேச வேண்டும். மக்களை நேரடியாக சந்தித்து பேசுவது அவசியம். மக்களிடம் நம் சாதனைகளை சொல்லுங்கள். வாக்களித்த பிறகு, வாக்கு எண்ணும் வரை இயந்திரங்களை பத்திரமாக பாதுகாப்பதும் நம் பணி தான். சமூகத்தில் உள்ள அனைத்து மக்களையும் கணக்கில் கொண்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

மோடியிடம் கேள்வி கேட்க மக்கள் காத்திருக்கிறார்கள். பயந்து கொள்ள நான் பழனிசாமி இல்லை. அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்க ரெய்டு விடுகிறார்கள். எவ்வளவு ரெய்டு விட்டாலும் எழுந்து நிற்போம். ஒரு கை பார்ப்போம். நாங்கள் பார்க்காத மிசாவா. நாங்கள் பார்க்காத தடாவா. எமர்ஜென்ஸியை பார்த்த இயக்கம் திமுக" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+