"நீ ஏன் அரைகுறையா டிரஸ் பண்ற?" பாலியல் சீண்டலை நியாயப்படுத்தினாரா திருச்சி என்ஐடி விடுதி வார்டன்?
திருச்சி: திருச்சி என்ஐடியில் மாணவிக்கு ஒப்பந்த ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் விடுதி வார்டனிடம் அவர்கள் புகார் கூறிய போது மாணவிகளின் ஆடை குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. யார் மீது புகார் சொல்கிறோமோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் கூறியவர்களை அவதூறாக பேசுவதா என கேட்டு மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்கு 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். தமிழகம், வெளி மாநிலம், வெளி நாட்டை சேர்ந்தவர்களும் இங்கு பொறியியலில் இளநிலை, முதுகலை படிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் இங்குள்ள மகளிர் விடுதியில் மின் விளக்கு பழுது என்பதால் அதை சரி செய்ய ஒப்பந்த ஊழியர் கதிரேசன் வந்தார்.

அவர் அங்கிருந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து விடுதி வார்டனிடம் அந்த மாணவி, சக மாணவிகளுடன் சென்று புகார் அளித்த போது அவருடைய ஆடை குறித்து வார்டன் விமர்சித்ததாக தெரிகிறது.
அதாவது தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காமலும் அவரை தட்டிக் கேட்காமலும் தான் அணிந்திருந்த ஆடை தவறு என்பதை போல் வார்டன் பேசியது மாணவிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வார்டனை பணியிடை நீக்கம் செய்ய கோரி இரவு முதலே விடுதி மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
கல்லூரி வளாகத்திலேயே உள்ள என்ஐடி இயக்குநர் வீட்டை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கதிரேசன் மீது பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் விடிய விடிய நடந்த போராட்டம் சற்று ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வார்டன் இடைநீக்கம் செய்யப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மாணவிகள் திட்டவட்டமாக கூறினர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திருச்சி என்ஐடியில் படிக்க வேண்டும் என்றால் மாணவர்கள் ஜேஇஇ மெயின்ஸ் என்ற தகுதி தேர்வை எழுதி அதில் சரியான கட் ஆஃப் பெறுவோருக்கு இந்த கல்லூரியில் பொறியியல் படிக்க இடம் கிடைக்கும். சென்னை ஐஐடியில் படிக்க ஜேஇஇ அட்வான்ஸுடு தேர்வு எழுத வேண்டும். இது சற்று கடினமாக இருக்கும் என்பதால் பெரும்பாலானோர் திருச்சி என்ஐடியில் சேர விரும்புகிறார்கள். இங்கு மாணவர்கள், மாணவிகளுக்கென விடுதி வசதியும் உள்ளது.
பெண்களுக்கு சிறு வயது முதலே குட் டச், பேட் டச் போன்றவை கற்பிக்கப்படுகின்றன. ஆனால் ஆண்களுக்கு அது போல் எதுவும் இல்லை. பெண்கள் ஒரு பருவத்தை எட்டியதும் அவர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் ஆண்களின் பார்வையில் எந்தவித மாற்றங்களும் இல்லை.
அதாவது பெண் சரியாக ஆடை அணியாவிட்டால் ஆண் எப்படி தவறாக பார்ப்பார் என்றுதான் இந்த சமூகம் கேட்கிறதே தவிர, ஆண்களும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை யாரும் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில்லை. ஆணின் மனதில் ஆயிரம் வக்கிரங்கள் இருந்தாலும் அதற்கு முழு காரணம் பெண்கள்தான், அவர்கள் அணியும் ஆடைதான் என்ற தவறான போக்கு பரவலாகி வருகிறது. இது பல ஆண்களுக்கு வசதியாக போய்விட்டது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications