திருப்பம்.. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்.. கலெக்டரிடம் 15 கிராம மக்கள் மனு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி 15 கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாக மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து கடந்த மே மாதம் 28ம் தேதி அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

15 Village people wants re open of Sterlite plant in Tuticorin

இதனிடையே ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வற்புறுத்தி 15 கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.

ஆத்தூர், உடன்குடி, தெற்கு வீரபாண்டியபுரம் உள்ளிட்ட 15 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளனர்.

இது குறித்து மனு அளிக்க வந்திருந்த ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்த ஊழியர் சங்கர் கூறியதாவது: ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய ஊழியர்களின் குடும்பத்தினர் எந்த அளவுக்கு நிதி சுமையால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை.

கடந்த 7 மாதங்களாக வருமானம் இல்லாத காரணத்தினால் எங்களது குடும்பம் நிதிச் சுமைக்கு உள்ளாகியுள்ளது. வீண் வதந்திகள் காரணமாகத்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெறுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் சுமார் நான்காயிரம் பேர் பணியாற்றுகிறோம். எங்களுக்கு எந்த விதமான நோய் பாதிப்பும் கிடையாது. புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வேண்டுமென்றால் முதலில் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு தானே ஏற்பட வேண்டும். தேவை என்றால் எங்களது உடல் நிலையை பரிசோதித்து கொள்ளட்டும் என்றார் அவர்.

தெற்கு வீரபாண்டியபுரத்தை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண் கூறியதாவது: மறுபடியும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை 3 வாரத்திற்குள் மாவட்ட ஆட்சியர் அமல்படுத்த வேண்டும். எங்கள் ஊரில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது. விவசாயத்திற்கு எங்கே செல்வது. வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லாத நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நம்பியுள்ளோம். கடந்த 7 மாதங்களாக கடுமையான கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம். எனவே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், 15 கிராம மக்கள் இதற்கு ஆதரவாக ஒன்று திரண்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 15 கிராம மக்கள் வருகையை ஒட்டி எதிர்ப்பாளர்கள்-ஆதரவாளர்களிடையே மோதல் நடைபெறாமல் இருக்க, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+