தூத்துக்குடியில் பரபரப்பு.. திடீரென கடற்கரையோரம் தரைதட்டிய சரக்கு கப்பல்.. என்ன நடந்தது?
தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய கப்பல் இழுத்து வரப்பட்டு கடற்கரையோரம் தரைதட்டி நிற்கிறது.
Recommended Video
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு கொழும்பு உள்ளிட்ட சில நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்காக பார்ச் எனப்படும் சிறிய வகை கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள இந்த கப்பல் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சரக்குகளை ஏற்றிச்செல்லும்.

சரக்குகளை ஏற்றுவதற்காக பழைய துறைமுகத்தில் இடம் இல்லாத காரணத்தினால் சில நேரங்களில் நங்கூர பகுதியில் நிறுத்தப்படும். இதேபோல் ''முத்தா எமரால்ட்" என்ற பார்ச் கப்பல் பழைய துறைமுகத்தில் இடம் இல்லாததால் பழைய துறைமுகத்தின் வெளிப்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை இந்த கப்பல் திடீரென காற்றின் வேகம் காரணமாகவும், கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாகவும் நங்கூரமிட்டு இருந்த பகுதியில் இருந்து இழுத்து வரப்பட்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இனிகோ நகர் கடல் பகுதியில் குடியிருப்புகளை நோக்கி அந்த கப்பல் நகர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள் உடனடியாக அங்கிருந்த தங்களது பைபர் படகுகளை கடலுக்குள் கொண்டு சென்று பாதுகாத்தனர். கரை தட்டி நிற்கும் அந்த கப்பலை அந்த பகுதி பொதுமக்கள், சிறுவர்கள், சிறுமிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பார்ச் கப்பலை மீண்டும் பழைய துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications