நாகம்பட்டி கல்லூரியில் வ. உ. சி. யின் படைப்பும் பதிப்பும் பன்னாட்டுக் கருத்தரங்கம், நூல் வெளியீடு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி கல்லூரியில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154ஆவது பிறந்தநாளையொட்டி கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் படைப்புகளை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் வ.உ.சி.யின் 154 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 'வ.உ.சி.யின் படைப்பும் பதிப்பும் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியிடுதல் நிகழ்ச்சி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மற்றும் கல்லூரியின் தமிழ்த் துறை இணைந்து செய்து வருகின்றன.

வ.உ.சி. சுதந்திரப் போராட்ட வீரர், காலனியாதிக்கக் காலத்தில் இந்திய கப்பல் போக்குவரத்தை முன்னிறுத்த சுதேசி கப்பல் நிறுவனத்தை நிறுவியவர் மட்டும் அல்ல! அவர் ஒரு மிகச் சிறந்த படைப்பாளி, பதிப்பாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். அவரைப் பற்றி முழுமையாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் யாவரும் அறியும் பொருட்டு இக்கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியிடுதல் நடைபெற உள்ளன.
என்ன கட்டுரை?
இதற்காக வ.உ.சி.யின் படைப்புகள் , பதிப்புகள், மொழிபெயர்ப்புகள், அவர் குறித்த நூல்கள் பற்றிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அந்த கட்டுரைகள் A4 தாள் அளவில் 6 பக்கங்களுக்கு மிகாமல் Arial Unicode font இல் இருக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரையாக இருந்தால் அது சொந்த முயற்சியாகவும், இதற்கு முன்னர் வேறெங்கும் பிரசுரிக்கப்படாததாகவும், தரம்மிகு கட்டுரையாகவும் இருக்க வேண்டும்.
யாரெல்லாம் கட்டுரை அனுப்பலாம்
அனைத்துத் துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தம் கட்டுரையை எழுதலாம். மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஒரு பேராசிரியரை நெறியாளராகத் தேர்ந்தெடுத்து, கட்டுரையை நெறிப்படுத்தி அனுப்ப வேண்டும்.
கட்டணம் செலுத்த வேண்டுமா?
நெறிப்படுத்தும் பேராசிரியருக்குச் சான்றிதழ் வழங்கப்படும். இளங்கலை, முதுகலை, ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் யாவரும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
எந்த ஈமெயில் முகவரிக்கு கட்டுரை அனுப்ப வேண்டும்?
விழாவில் கலந்து கொள்வோருக்கு ISBN எண்ணிடப்பட்ட கருத்தரங்க நூல் (Hardcover Book), சான்றிதழ், வழங்கப்படும். உங்கள் கட்டுரைகளை [email protected] / [email protected] என்கிற இரண்டு மின்னஞ்சல் முகவரிக்கும் Word file and PDF ஆக, டிசம்பர் 31, 2025 க்குள் அனுப்ப வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ.ஆ.ப., திருவெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் இயக்குநர் முனைவர் அ. வெளியப்பன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் மா. முருகானந்தம் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சேதுராமன், இணை ஒருங்கிணைப்பாளர் பவானி உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications