தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மதுரை ஆதீனம் விவகாரம்.. ஒலித்தது உரிமை குரல், நடப்பது உரிமை போராட்டம்.." அர்ஜுன் சம்பத் பொளோர்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: மதுரை ஆதீனத்தின் பேச்சு தமிழக அரசியலில் தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மதுரை ஆதீனம் விவகாரம்.. ஒலித்தது உரிமை குரல், நடப்பது உரிமை போராட்டம்.. அர்ஜுன் சம்பத் பொளோர்

    தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து மீட்டு அதை ஆதினங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை மீண்டும் எழத் தொடங்கி உள்ளது.

    மறுபுறம் மதுரை ஆதீனத்தின் பேச்சு கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற துறவிகள் மாநாட்டில் கூட அரசை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேசி இருந்தார்.

     Stalin is more Dangerous than Karunanithi- மதுரை ஆதீனத்துக்கு திமுகவின் முரசொலி கடும் எச்சரிக்கை! Stalin is more Dangerous than Karunanithi- மதுரை ஆதீனத்துக்கு திமுகவின் முரசொலி கடும் எச்சரிக்கை!

     மதுரை ஆதீனம்

    மதுரை ஆதீனம்

    அதாவது ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்கிறார்களே? நாங்கள் பேசாமல் யார் பேசுவார்கள்.. ஆதீனம் என்றால் பதுங்கி கிடக்க முடியாது. ஜால்ராவும் அடிக்க முடியாது. இந்துக்கள் இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். ஏற்கனவே கோயில்களில் அரசியல்வாதிகள் நுழைந்துவிட்டனர் என்ற ரீதியிலும் கூட அதீனம் பேசி இருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருந்த நிலையில், அமைச்சர் சேகர்பாபு இதற்கு பதில் கொடுத்து இருந்தார்.

     அர்ஜுன் சம்பத்

    அர்ஜுன் சம்பத்


    அத்துடன் இந்த விவகாரம் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ள கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்துக்களின் குரலாக மதுரை ஆதீனம் பேசியுள்ளார் என்று குறிப்பிட்ட அவர், மதுரை ஆதீனம் ஒலித்தது உரிமைக் குரல் என்றும் நடப்பது உரிமை போராட்டம் என்றும் தெரிவித்தார்.

     மதச்சார்பற்ற அரசு

    மதச்சார்பற்ற அரசு

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறில் இந்து மக்கள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசு மதச்சார்பற்றது என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

     சொத்துகள்

    சொத்துகள்

    ஆனால் தேவாலய சொத்து கிறிஸ்துவர்கள் கையில், மசூதி சொத்து இஸ்லாமிய மக்கள் கையில் தான் இருக்கிறது. வக்பு வாரியம், கிறிஸ்துவ சபைகளில் அரசு தலையிட முடியாது, ஆனால் திருக்கோவில் நிர்வாகத்தில் மட்டும் அதிமுக, திமுக என எந்த அரசாக இருந்தாலும் தலையீடு இருக்கும். எனவே தான் 40 ஆண்டுகளாக ஆலயத்தை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று போராட்டத்தினை நடத்தி வருகிறோம்.

     உரிமைக் குரல்

    உரிமைக் குரல்

    திமுக அரசுக்கோ, அமைச்சர் சேகர்பாபுவிற்கு எதிராக மதுரை ஆதீனம் பேசவில்லை. கோவில் நிர்வாகத்தில் அரசு வெளியறே வேண்டும் என்ற அவரது கோரிக்கையை வைக்கிறார். கோவில் சொத்துக்கள் கோவில் வளர்ச்சி, பக்தர்களின் வசதிக்காகப் பயன்படுத்த வேண்டும், இதைத் தான் மதுரை ஆதினம் வெளிப்படுத்தியுள்ளார். இந்துக்களின் குரலாக மதுரை ஆதினம் பேசியுள்ளார். எல்லா ஆதினங்களின் கருத்தும் இது தான். அரசியல் உள்நோக்கம் இல்லை. ஒலித்தது உரிமைக் குரல், நடப்பது உரிமை போராட்டம்" என்று தெரிவித்தார்.

    English summary
    Hindu Makkal Katchi Chief Arjun Sampath supports Madurai Adheenam on temple issue: (கோயில் சொத்துகள் விவகாரத்தில் மதுரை ஆதீனத்தை ஆதரிக்கும்அர்ஜூன் சம்பத்) Hindu Makkal Katchi Chief Arjun Sampath latest press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X