தூத்துக்குடி, ராமநாதபுரம் கன்னியாகுமரி,நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, ராமநாதபுரம் கன்னியாகுமரி,நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் (திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் (திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி) நாளை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மாறுநாள், தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

டிச.8,9 முன்னெச்சரிக்கை
வரும் 8-ந் தேதியன்று கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். டிசம்பர் 9-ந் தேதியன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் மேகமூட்டம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): கொடுமுடி (ஈரோடு), ஆனைபாளயம் (கரூர்) தலா 9, கோவை 7, எட்டயபுரம் (தூத்துக்குடி) 6, நாங்குநேரி (திருநெல்வேலி), மோகனுர் (நாமக்கல்) , வெம்பக்கோட்டை (விருதுநகர்) , சின்னக்கல்லார் (கோவை) தலா 5, பஞ்சப்பட்டி (கரூர்) , பூதப்பாண்டி (கன்னியாகுமாரி) , வீரபாண்டி (தேனி) , சிவகாசி (விருதுநகர்), உடுமல்பேட் (திருப்பூர்) தலா 4, ஆண்டிபட்டி (தேனீ), கரூர், போடிநாய்க்கனுர் (தேனீ) , ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), தல்குளம் (மதுரை) , மாயனுர் (கரூர்) , சாத்தூர் (விருதுநகர்) , ராதாபுரம் (திருநெல்வேலி), ஈரோடு தலா 3, அரவக்குறிச்சி (கரூர்), உத்தமபாளையம் (தேனீ) , கிருஷ்ணராயபுரம் (கரூர்) , சோழவந்தான் (மதுரை) , மைலாடி (கன்னியாகுமாரி), ராமநாதபுரம், மேட்டுப்பட்டி (மதுரை) , குன்னூர் (நீலகிரி) , குமாரபாளையம் (நாமக்கல்) , சேந்தமங்கலம் (நாமக்கல்) தலா 2, கொடைக்கானல் (திண்டுக்கல்) , வேடசந்தூர் (திண்டுக்கல்),
நாமக்கல் குழித்துறை (கன்னியாகுமாரி) , பரமத்திவேலூர் (நாமக்கல்) , வாடிப்பட்டி (மதுரை) , பெரியகுளம் (தேனீ), தூத்துக்குடி , சிட்டம்பட்டி (மதுரை) , வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்) தலா 1 செ.மீ.

மீனவர்களுக்கான அறிவுறுத்தல்
வங்க கடல் பகுதிகள் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிஷா கடற்கரையோரம் நிலைகொள்ளும். இதன் காரணமாக இன்று வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், ஒடிஷா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications