தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 மாதங்களுக்குப் பின் தூத்துக்குடி - பெங்களூரு விமான சேவை நாளை மறுநாள் மீண்டும் தொடக்கம்: இண்டிகோ

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: 4 மாதங்களுக்குப் பின்னர் தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு நாளை மறுநாள் முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா லாக்டவுனால் நாடு முழுவதும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

IndiGo to resume Tuticorin-Bangalore service from Aug.8

இதனையடுத்து 45 சதவீத பயணிகளுடன் விமானங்களை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தளர்வுகளுடன் உள்நாட்டு விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த தளர்வுகள் நவம்பர் 24ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருக்கு.. வடசென்னை மக்களே அச்சம் வேண்டாம்.. சுங்கத் துறை அதிகாரிகள்அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருக்கு.. வடசென்னை மக்களே அச்சம் வேண்டாம்.. சுங்கத் துறை அதிகாரிகள்

இதனையடுத்து தூத்துக்குடி பெங்களூரு இடையே இண்டிகோ விமான சேவை வருகிற 8-ந் தேதி மீண்டும் தொடங்குகிறது. இதன்படி செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் விமான சேவை நடைபெறும் என்று இண்டிகோ நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு - தூத்துக்குடி விமானம் காலை 7.20க்கு புறப்பட்டு 9.00 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். அதுபோல் தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானம் காலை 9.20க்கு புறப்பட்டு 11 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

English summary
IndiGo will resume Bangalore-Tuticorin service from August 8.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X