அதிமுகவுக்கு டப்பு டப்புனு அமுக்குங்க.. பட்டு பட்டுனு 10,000 பணம் வரும்.. கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி: சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து எப்படியாவது ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. ஆனாலும் கூட்டணி, உள்கட்சி பிரச்சனை என்று அதிமுக பல்வேறு நெருக்கடிகளில் தத்தளித்து வருகிறது. திமுகவின் நடவடிக்கைகளும் அவர்களை தடுமாற செய்துள்ளது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பார்த்து டப்பு டப்புனு பட்டனை அமுக்குங்க. தேர்தல் முடிந்த பிறகு பட்டு பட்டுனு உங்கள் வீட்டில் ரூ.10,000 வந்து விழும் என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, "எடப்பாடியார் முதல்வராவது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. இந்த தேர்தல் வெறும் சம்பிரதாய சடங்கு. மக்கள் இவ்வளவு கஷ்டப்பட்ட பிறகும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். ஸ்டாலின் பேசும் எதுவும் மக்களுக்கு புரிவதில்லை. பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம் தான் என்று அறிவாளி போல பேசுகிறார். எதோ பூஜ்ஜியத்தைத்தான் இவர் கண்டுபிடித்துள்ளாரா [Kadambur Raju].

திமுகவுக்கு ராசியில்லை
2021 நாம் பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 கொடுத்தபோது, ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தார். அப்போதே ஏதோ கணக்குகளை பேசி சிக்கினார். நாங்கள் பூஜ்ஜியம்.. பூஜ்ஜியம் வாங்குவோம். அந்த பூஜ்ஜியங்களுக்கு முன்பு 2 இருக்கும். அதாவது 200 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். இரட்டை இலை போல 2 சேர்த்து 200 தொகுதிகளை கைப்பற்றுவோம்.
199 எல்லாம் கிடையாது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 2026 தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும். திமுக என்றைக்கும் ஆட்சியில் இருந்து, மறுபடியும் ஆட் அமைத்ததில்லை. திமுகவுக்கு அந்த ராசி இல்லை. ஒருமுறை ஆட்சிக்கு வந்தாலே மக்களிடம் வெறுப்புகளை சம்பாதித்துவிடுவார்கள். எவ்வளவோ தேர்தல் வாக்குறுதிகளை திமுக கொடுத்தது. அதை நிறைவேற்றவில்லை.
டப்பு.. டப்பு.. பட்டு.. பட்டு
100 நாள் வேலை திட்டத்தை 125 நாளாக மாற்றுவோம் என்றனர். கிராமங்களில் 50 நாட்கள் கூட வேலை கிடைப்பதில்லை. மக்களை பல வழிகளில் ஏமாற்றி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி வாக்குறுதிகளை நிறைவேற்றுவார். தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பார்த்து டப்பு டப்புனு பட்டனை அமுக்குங்க. தேர்தல் முடிந்த பிறகு பட்டு பட்டுனு உங்கள் வீட்டில் ரூ.10,000 வந்து விழும்" என்றார்.












Click it and Unblock the Notifications