தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு 3ஆம் ஆண்டு நினைவு தினம் - உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி வழிபட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் 2வது யூனிட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிந்தது குமரெட்டியார்புரம், பண்டாரம்பட்டி, மடத்தூர் மீளவிட்டான் உள்ளிட்ட ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமத்தில் தொடர் போராட்டம் நடைபெற்றது. .

ஸ்டெர்லைட் தாமிர ஆலை காற்று, நிலம், நீர் என சுற்றுச்சூழலை மாசுபடுத்தியுள்ளதாக கூறி, பலருக்கும் புற்றுநோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகக்கூறி கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி மக்கள் 100 நாட்கள் அமைதிவழியில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் 100வது நாளன்று ஊர்மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர்.
ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்து வந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலரும் காயமடைந்தனர். இதனை அடுத்து, உடனடியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களுக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 3ம் ஆண்டு நினைவுதினம் இன்று குமரெட்டியார்புரத்தில் கடைபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின், தமிழரசன், ரஞ்சித், ஜெயராமன், மணிராஜ், ஜான்சி, கந்தையா, அந்தோணி செல்வராஜ், கார்த்தி, காளியப்பன், சண்முகம், கிளாஸ்டன், செல்வசேகர், பரத்ராஜ், ஜஸ்டின் ஆகியோரின் அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டு அதன் முன் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி வழிபட்டனர். சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என முழக்கமிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications