"இவ என் தாய் மீனாட்சி.. வாயில அடிங்க.. வாயில அடிங்க.." நகராட்சியில் ஒரு நாடக காட்சி
பணியின்போது டிக்டாக் வீடியோவில் நடித்து உள்ளனர் நகராட்சி ஊழியர்கள்
Recommended Video
தூத்துக்குடி: காயல்பட்டினம் முனிசிபாலிட்டி ஆபீசில் வேலை எல்லாம் பார்க்க மாட்டாங்க போல இருக்கு. டிக்டாக் ஆப்பில் நடித்து, திறமைகளை வெளிப்படுத்தும் அளவுக்கு இவர்களுக்கு நேரமும் இருக்கும் போல தெரியுது.
காயல்பட்டினம் நகராட்சி ஊழியர்கள் மீது ஏற்கனவே நிறைய புகார்கள் மக்கள் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில், அங்கு வேலை பார்க்கும் 2 பேர் ஆடிப்பாடி நடித்து டிக்டாக் ஆப்பில் வீடியோ போட்டுள்ளார்கள்.

அந்த வீடியோவில், பெண் ஊழியர் ஒருவர் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கிறார். பக்கத்தில் நின்றிருக்கும் ஆண் ஊழியர், அந்த பெண் ஊழியரிடம் கம்ப்யூட்டரை காட்டி, "தினமும் நல்லா கிளீன் பண்ணுவீங்களோ.." என்று கேட்கிறார்.
அதற்கு பெண் ஊழியர், "கிளீனிங்னு சொல்லாதீங்க.. வாயில அடிங்க.. வாயில அடிங்க.. தினம் அபிஷேகம் பண்ணுவியாப்பான்னு கேளுங்க. யார் கேட்டாலும் அப்படித்தான் சொல்லுவேன்.. ஏன்னா இவ என் தாய் மீனாட்சி" என்று பதில் சொல்லுகிறார். இது வடிவேலு டயலாக்தான்.
இது பரவாயில்லைங்க.. நல்லா நடிச்சிருக்காங்கன்னு வச்சுக்கலாம்.. இன்னும் இரண்டு ஆண் ஊழியர்கள் நகை நட்டோடு காட்சி தந்து காமடெி செய்திருக்கிறார்கள் பாருங்க.. அதைத் தாங்க பொறுத்துக்க முடியலை.. சகிக்கலை.
இப்படி டிக்டாக் பண்றதுகூட தப்பில்லைதான். ஆனால் ஆபீசில் வேலையை பார்க்காமல், இப்படியா நேரத்தை வீணாக்கி கூத்தடிப்பதா என்று, காயல்பட்டினம் மக்கள் முணுமுணுக்கிறார்கள். வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி தொடர்பாக சென்றால் முறையாக பதிலளிக்காமல் அலைக்கழிக்கின்றனர். இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையாவது எடுங்கள் என்று கோரிக்கையும் விடுக்கிறார்கள். வாயில அடிங்க.. வாயில அடிங்க.. என்று சொல்லி இப்படியே ஆட்டம் போட்டால், மேலதிகாரிகள் உங்கள் வயிற்றில் அடித்து விடுவார்கள் என்பது புரிந்தால் சரி!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications