ஆதரவற்ற பெண்களுக்கு கைகொடுக்கும் தமிழ்நாடு அரசு.. அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்த சூப்பர் திட்டம்!
தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் 3,499 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளதாக தமிழ்நாடு சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
குடும்ப சூழ்நிலைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியேறக் கூடிய பெண்கள் தங்குவதற்கும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 48 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை அமைச்சர் பி.கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

அதன்பின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த கீதா ஜீவன் கூறியதாவது:- பல்வேறு குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டைவிட்டு பெண்கள் வெளியேறுகின்றனர் அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் வகையில் இந்த சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே மருத்துவர்கள், பெண்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள் பணியில் இருப்பார்கள். இந்த மையம் குறுகிய கால சேவை மையமாக செயல்படும்.
இதேபோன்று சேவை மையம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு வருகிறது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் 93 குழந்தைகள் தாய்,தந்தை இரண்டு பேரையும் இழந்துள்ளனர். 3 ஆயிரத்து 499 குழந்தைகள் தாய் அல்லது தந்தை இரண்டு பேரில் ஒருவரை இழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோர் இரண்டு பேரையும் இழந்த குழந்தைகள் நான்கு பேர் உள்ளனர். தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரை இழந்தவர்களாக 77 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இது குறித்து தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த வைப்புத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் முறைப்படி வழங்கப்படும். கல்லூரி வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகள் கல்லூரிப்படிப்பு அவர்களது படிப்பு தடை படாமலிருக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கீதா ஜீவன் தெரிவித்தார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications