தூத்துக்குடியில் மீண்டும் வெடித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்.. போலீஸ் குவிப்பு
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று வலியுறுத்தி, அந்த நகர மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொது மக்களின் போராட்டத்திற்கு, போலீசார் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அங்கு பதட்ட சூழ்நிலை உருவாகியுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாக குற்றம்சாட்டி, பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 அப்பாவி மக்கள் பலியாகினர்.
இதையடுத்து மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்து, ஸ்டெர்லைட் ஆலையை மூன்று வாரங்களுக்குள் திறக்க அனுமதிக்க வேண்டும், என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனால் மீண்டும் தூத்துக்குடியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி, புதுத்தெரு, திரேஸ்புரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், குமாரட்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் உள்ள கருப்பு புடவை மற்றும் கருப்பு துணிகளை கட்டி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக, கருப்புகெடிகாட்டும்ஆர்பாட்டம் ஹென்றி தாமஸ் தலைமையில் நடைபெற்றது.
இதனிடையே, தூத்துக்குடி புதுத்தெருவில் கருப்புக்கொடி ஏற்றிய பொது மக்களை போலீஸ் மிரட்டும் காட்சி வைரலாக பரவி வருகிறது. ஆங்காங்கு, கருப்புக்கொடிகளை அகற்றும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் சற்று தணிந்திருந்த தூத்துக்குடி மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications