6 வருஷ காதல்! கயத்தாறில் "கழுத்தறுத்த" காதலன்.. வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு.. பெண் தர்ணா
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு உள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். இவரது மகள் எபிலாதேவி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
கல்லூரி படித்த போது இருவருக்கும் காதல் பற்றி கொண்டதாக தெரிகிறது. எபிலாதேவியை திருமணம் செய்து கொள்வதாக பாலமுருகன் பல முறை உறுதி அளித்ததாக தெரிகிறது.

எபிலா தேவி
இந்த நிலையில் எபிலாதேவிக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி நவம்பர் 7 ஆம் தேதி பாலமுருகன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக எபிலாதேவிக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த எபிலா தேவி கடம்பூர் காவல் நிலையத்தில் பாலமுருகன் மீது புகார் அளித்துள்ளார்.

6 ஆண்டுகள்
தன்னை 6 ஆண்டுகளாக காதலித்துவிட்டு நகை, பணத்திற்காக வேறு ஒரு பெண்ணை பாலமுருகன் திருமணம் செய்ய முன்வந்துள்ளார் என்றும் தனது புகாரில் எபிலாதேவி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காவல் நிலையத்தில் பாலமுருகனுடைய உறவினர் ஒருவர் பணியாற்றி வருவதால் அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி பாலமுருகனை போலீஸார் விடுவித்ததாக தெரிகிறது.

அதிர்ச்சி அடைந்த எபிலாதேவி
இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த எபிலாதேவி தன்னை காதலித்துவிட்டு ஏமாற்றிய பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 7 ஆம் தேதி வேறு ஒரு பெண்ணுடன் நடைபெறுவதாக இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார்.

பரபரப்பு
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து எபிலா தேவி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இதையடுத்து எபிலாதேவி தனது கோரிக்கை மனுவை சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஐயப்பனிடம் வழங்கினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு எழுந்தது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கடலூர் மஞ்சுளாவின் கள்ளக்காதல்.. விக்கிரவாண்டி பாலத்து மணலில் இப்படியா ஆகணும் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications