பாமக 2.0.. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு.. தமிழக அரசு நிச்சயம் வழங்கும்.. அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை!
ராணிப்பேட்டை : வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு நிச்சயம் வழங்கும் எனவும், பாமக 2.0 eன்ற திட்டத்தின் மூலம் இளைஞர்கள் கிராமங்கள் தோறும் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என பாமக இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அன்புமணி ராமதாஸ்
அப்போது பேசிய அவர், "பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்கள் அதிகளவில் உள்ளதாகவும், 2026 ல் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக PMK 2.0 என்ற புதிய திட்டத்தின் மூலம் இளைஞர்கள் கிராமங்கள் தோறும் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் நிழல் நிதிநிலை அறிக்கை, நிழல் வேளாண் அறிக்கை போன்றவற்றை நிஜத்தில் தாக்கல் செய்ய வேண்டும்

வன்னியர் இட ஒதுக்கீடு
தமிழகத்தில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தங்களிடம் ஆக்கப்பூர்வமான தீர்வுகள் இருப்பதாக பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்த அன்புமணி ராமதாஸ், உச்சநீதிமன்ற தீர்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்க தேவையான தரவுகளோடு தமிழக அரசு வழங்கலாம் என தெரிவித்துள்ளது

மிகப்பெரிய போரட்டம்
தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திமுக நிச்சயம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும், தமிழகத்தில் பெட்ரோல், டீசல், LPG, வீட்டு வரி ஆகிய விலைவாசி 145% உயர்ந்திருப்பதாகவும், உடனடியாக விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

பாதுகாக்க வேண்டும்
காலநிலை மாற்றத்தால் இனிவரும் காலங்களில் தமிழகம் மிகப் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எனவும், அதை தடுக்க பாலாற்றின் குறுக்கே 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பணை, நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என பேசினார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications