Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதை மறக்க முடியாது.. இலங்கை தமிழர் புதிய குடியிருப்பு அடிக்கல் நாட்டு விழாவில் ஸ்டாலின் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்றும், இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுக என்றும் கடந்த 10 ஆண்டு காலம் இலங்கை தமிழர்கள் குறித்து அதிமுக அரசு கவலைப்படவில்லை என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Recommended Video

    இலங்கை தமிழர் குடியிருப்புக்குள் திடீர் ஆய்வு... குழந்தையை தூக்கிக் கொஞ்சிய முதல்வர்...!

    தமிழகம் முழுவதும் உள்ள 106 முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்து இருந்தார். இதன்படி முதற்கட்டமாக 3510 வீடுகள் புதிய குடியிருப்புகளை கட்டுவதற்கு ரூ.142. 16 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் துவங்கி வைத்தார்.

    இதில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ரூ.30 கோடி மதிப்பில் இலங்கை தமிழ் மக்களுக்காக இதர அடிப்படை வசதிகளுக்காக முதல்வர் அடிக்கல் நாட்டியதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
    இவ்விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கைத்தறி துறை அமைச்சர் காந்தி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

    மறக்க முடியாது

    மறக்க முடியாது

    விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "ஒரு அடையாள சொல்லாகத்தான் இலங்கை தமிழர்கள் என்று நான் அவர்களை அழைத்தேன். மற்றபடி அவர்கள் எங்கே எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அவர்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் தான். இலங்கை தமிழர்கள், தமிழகத்தில் வாழும் தமிழர்கள், இனத்தால், மொழியால், நாகரீகத்தால், பண்பாட்டால் ஒன்றுபட்டவர்கள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நாம் அனைவரும் தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள். கடல் தான் நம்மை பிரிக்கிறது. நீங்கள் விட்ட கண்ணீர் நம்மை இணைத்துக்கொண்டிருக்கிறது. இலங்கை தமிழர்களின் கண்ணீரை மறக்க முடியாது.

    பல்வேறு திட்டங்கள்

    பல்வேறு திட்டங்கள்

    இலங்கை தமிழர்களுக்கு திமுக அரசு எப்போதும் துணை நிற்கும் . 1983 ஆம் ஆண்டு அவர்கள் தமிழகத்திற்கு வந்த போது அவர்களுக்கு திமுக ஆதரவு அளித்தது. அவர்கள் தங்கவைக்கப்பட்ட முகாம்கள் எல்லாம் 1997 ஆம் ஆண்டு மோசமடைந்துவிட்டது. இதனால் அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம்.

    106 முகாம்கள்

    106 முகாம்கள்

    கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு இலங்கை தமிழர்களுக்காக எந்த நன்மையையும் செய்யவில்லை அதை பற்றி கவலைப்படவில்லை இலங்கை தமிழர்கள் அகதிகளோ, அனாதைகளோ அல்ல; நாங்கள் இருக்கிறோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; என்னை உங்களின் சகோதரனாக ஏற்றுக்கொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள்106 முகாம்களில் 19046 இலங்கை தமிழர் குடும்பங்கள் உள்ளன இவர்களுக்கு 7469 வீடுகள் கட்டித்தரப்படவுள்ளது. முதற்கட்டமாக 3510 வீடுகளை கட்ட துவங்கியுள்ளோம்.

     மாதாந்திர உதவி தொகை

    மாதாந்திர உதவி தொகை

    அடுத்த கட்டமாக மீதமுள்ள வீடுகள் கட்டப்படும். கடந்த 10 ஆண்டுகளாக அவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உதவி தொகை உயர்த்தபடவில்லை. அது உயர்த்தபடும். இலங்கை தமிழர் மாணவர்கள் கல்வி கற்க பல்வேறுதிட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இவர்களின் அரிசி மானியத்தை அரசு முழுமையாக ஏற்கும்.

    அடிப்படை வசதிகள்

    அடிப்படை வசதிகள்

    இது போன்று இலங்கை தமிழர்களுக்காக அறிவிக்கப்பட்ட 10 திட்டங்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும். .அவர்களுக்கு குடிநீர் குடியிருப்பு மின்சாரம் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் 30 கோடியில் செய்யபடும். திமுக அரசு இலங்கை தமிழர்களுக்காக எப்போதும் தனது கதவை திறந்து வைத்துள்ளது" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து இலங்கை தமிழர் முகாம் குடியிருப்புக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+