முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டம்.. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கலெக்டர் குட்நியூஸ்
வேலூர்: முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் கைம்பெண்களின் நலனுக்காக 'முதலமைச்சரின் காக்கும் கரங்கள்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், சுயதொழில் தொடங்கவும் வங்கிகள் மூலம் ரூ.1 கோடி வரை வங்கிக்கடன் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் கைம்பெண்களின் நலனுக்காக 'முதலமைச்சரின் காக்கும் கரங்கள்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், சுயதொழில் தொடங்கவும் வங்கிகள் மூலம் ரூ.1 கோடி வரை வங்கிக்கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்கு கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமாகவும், கடனுக்கான வட்டியில் 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் அளிக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க விரும்பும் 55 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள், மறுமணம் ஆகாத கைம்பெண்கள், பணியின்போது உயிர்நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள் மற்றும் முன்னாள் படைவீரரை முற்றிலும் சார்ந்திருக்கும் திருமணமாகாத மகள் அல்லது கைம்பெண் மகள் ஆகியோர் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, முன்னாள் படைவீரர் அடையாள அட்டை, படைப்பணி சான்றிதழ், கல்வி சான்றிதழ், வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் வேலூர் பெரியார் பூங்கா அருகே உள்ள ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரிலோ அல்லது [email protected] என்ற இணையதளத்திலோ விண்ணப்பிக்கலாம்.
வருகிற 20-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications