வாந்தி, வயிற்றுப்போக்கு... மெடிக்கல் ஷாப் மாத்திரை சாப்பிட்ட 2 குழந்தைகள் பலி
வேலூரில் உடல்நலக்குறைவு காரணமாக மெடிக்கல் ஷாப்பில் மாத்திரைகளை சாப்பிட்ட 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

மாத்திரையை விழுங்கிய 2 குழந்தைகளும் சிறிது நேரத்தில் சுயநினைவை உயிரிழந்ததால் பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் இழந்துவிட்டனர்.
வேலூர் கஸ்பா பஜார் தெருவில் அன்சர் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு சுரையா என்ற மனைவியும் 4 வயதுடைய ஆப்ரின், 3 வயதுடைய அசன் ஆகியோ குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 நாட்களாக வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு சாதாரண பாதிப்பாகத்தான் இருக்கும் என கருதிய பெற்றோர் அருகில் உள்ள தர்காவிற்கு குழந்தைகளை அழைத்து சென்று தாயத்து கட்டிக் கொண்டு வந்துவிட்டனர். தொடர்ந்து 2 குழந்தைகளும் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டதால் மருத்துவமனைக்கு செல்லாமல் அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளனர். மாத்திரைகளை சாப்பிட்ட குழந்தைகள் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்துள்ளனர். இதனால் பதறிப்போன பெற்றோர் இரண்டு குழந்தைகளும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் மருத்துவமனைக்கு வரும்போதே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். குழந்தைகளின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications