வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடடா.. விடுங்கப்பா என்னை.. "அங்கே என்ன தெரிகிறது".. காட்பாடியை கலக்கிய துரைமுருகன்!

பொன்னை ஆற்று பாலத்தை பார்வையிட்டார் துரைமுருகன்

Google Oneindia Tamil News

வேலூர்: ஒரே நாளில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடியையே கலக்கி விட்டார்..!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் ஒன்று சேதமடைந்துள்ளது.

இதனால், பொதுப்பணித் துறை சார்பில் பராமரிப்பு பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. அதனால் 2 பக்கமும் தடுப்பு வைத்து, வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது... பராமரிப்பு பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.

Durai murugan inspects Katpadi Bridge in Vellore

இந்த பணிகளை துரைமுருகன் நேரில் பார்வையிட விரும்பினார்.. அப்போது அவருடன் எம்பி கதிரவனும் சென்றிருந்தார்.. பராமரிப்பு பணிகள் நடப்பதால், ஒரு ஏணி அங்கு இருந்தது.. அந்த ஏணி வழியாக இறங்கி கீழே சென்று பணிகள் எப்படி நடக்கிறது என்று கதிரவன் பார்த்தார்... ஆனால் துரைமுருகனோ ஏணியை பிடிக்காமல், அப்படியே பாலத்தின் முனையில் இருந்தே எட்டிப்பார்க்க முயன்றார்.

ஆனால், அவருக்கு அந்த பணிகள் நடைபெறுவது கண்ணுக்கு தெரியவில்லை.. அதனால், பாலத்தின் முனைப்பகுதிக்கே செல்ல முயன்றார் துரைமுருகன்.. இதை பார்த்து பதறிப்போன அவரது உதவியாளர்கள், துரைமுருகனை தடுக்க வந்தனர்.

ரஜினிகாந்த் ஓய்வில் உள்ளார்.. அவரை சந்திக்க மருத்துவமனைக்கு யாரும் வரவேண்டாம்.. சௌந்தர்யா வேண்டுகோள்ரஜினிகாந்த் ஓய்வில் உள்ளார்.. அவரை சந்திக்க மருத்துவமனைக்கு யாரும் வரவேண்டாம்.. சௌந்தர்யா வேண்டுகோள்

"அட விடுங்கப்பா என்னை", என்று சொல்லி கொண்டே மறுபடியும் பாலத்தின் முனையில் நின்றே அந்த பணிகளை பார்வையிட்டார்.. இதற்கு பிறகே அங்கிருந்தோர் நிம்மதியானார்கள்.. அப்போதுகூட, அவரை பின்னால் இருந்து உதவியாளர்கள் துரைமுருகன் இடுப்பை பிடித்து கொண்டார்கள்.. அதேசமயம், இந்த வயசிலயும் துரைமுருகன், பணியில் காட்டும் ஆர்வத்தை நினைத்து பூரித்து போனார்கள்..

இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், "கிராம சபை கூட்டம் என்ற அந்த வார்த்தையை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற அதிகாரமும் சட்டமும் இல்லை.. 'மக்கள் கிராம சபை' என்ற பெயரில் கூட்டம் நடத்ததான் போகிறோம். 'சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும்' என்பது போல பெயரை மாற்றுவதால் எங்கள் வெற்றியை யாரும் தடுத்துவிட முடியாது.. ரஜினி கட்சி ஆரம்பித்தால் கட்சியின் பெயரை பேப்பரில் பார்த்து தெரிந்து கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

English summary
Durai murugan inspects Katpadi Bridge in Vellore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X