லோக்சபா தேர்தல் 2024: வேலூரில்.. தாமரை சின்னத்தில் களமிறங்கும் புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம்
வேலூர்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம், தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலை எந்த கூட்டணியை வைத்து திமுக எதிர்கொண்டதோ, அதே கூட்டணியுடன் லோக்சபா தேர்தலுக்கு திமுக தயாராகி வருகிறது. ஆனால் மறுபுறம் அதிமுகவும், பாஜகவும் இரு துருவங்களாக பிரிந்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளன. ஆனால், இதுவரை இந்த கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்யவில்லை

கடந்த முறை பாஜகவும், ஒபிஎஸ்ஸுடன் கூடிய அதிமுகவும் சேர்ந்துதான் தேர்தலை எதிர்கொண்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு பலம் இருப்பதாக சொல்லப்பட்டாலும் மொத்தம் இருந்த 35 எம்எல்ஏ தொகுதிகளில் அதிமுக 14 தொகுதிகளிலும், பாஜக இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த முறை ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து கழற்றிவிடப்பட்டிருக்கிறார், பாஜகவும் பிரிந்திருக்கிறது. அதிமுகவை பொறுத்த அளவில், பாஜக இல்லாமல் இந்த தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. எனவே சிறிய கட்சிகளை அணிதிரட்ட திட்டமிட்டிருக்கிறது. மறுபுறம் பாஜகவும், பாமக+தேமுதிக+உதிரி கட்சிகளை இணைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதன் பலனாக தற்போது புதிய நீதி கட்சியின் ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “6 மாதமாக வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறோம். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறேன்” என்று கூறியுள்ளார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications