வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமைச்சர்களை அடக்கி வைக்காவிட்டால் மோசமான பின் விளைவு வருமாம்.. முதல்வரை எச்சரிக்கும் எச்.ராஜா

Google Oneindia Tamil News

வேலூர்: அமைச்சர் காந்தி போன்றவர்களை முதல்வர் ஸ்டாலின் அடக்கி வைக்க வேண்டுமெனவும், இல்லை என்றால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார்.

Recommended Video

    அமைச்சர்களை அடக்கி வைக்காவிட்டால் மோசமான பின் விளைவு வருமாம்.. முதல்வரை எச்சரிக்கும் எச்.ராஜா

    வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பத்தில் பாரதியஜனதா கட்சியின் தீன் தயாள் உபாத்யாயா பேரியக்கம் சார்பில் பாஜகவினருக்கு மூன்று நாட்கள் பயிற்சி நடக்கிறது.

     காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது

    இன்று தொடங்கி வரும் 19 ஆம் தேதி வரையில் நடைபெறும் பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த முகாமினை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இதில் பாஜக மாவட்டத்தலைவர் தசரதன் ,ஜெகன்,சரவணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர் .

    கொளத்தூரில் மக்கள் அவதி

    கொளத்தூரில் மக்கள் அவதி

    நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எ.ச்.ராஜா , மழையால் டெல்டா பகுதிகளில் மிகபெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளாக கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள நிலையில், மேம்பாலம், பார்க் கட்டுவதாகக்கூறி வீடுகளை அதிகாரிகள் இடிப்பதாகவும், தனது சொந்த தொகுதி மக்களுகே முதல்வர் ஸ்டாலின் நல்லது செய்வது இல்லை எனக் கூறினார்.

    மக்களுக்கு மாற்று இடம்

    மக்களுக்கு மாற்று இடம்

    மோடி கங்கையில் குளித்ததால் சுகாதாரமற்ற சூழல் இருந்த கங்கை ஆறு தூய்மைபடுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளதாகவும், 100 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி வசதிகள் ஏற்படுத்தப்படுத்தி தந்துள்ளதாகவும், இதேபோல் கொளத்தூர் தொகுதியில் உள்ள மேம்பாலம் பார்க் கட்ட 120 வீடுகளை இடிப்பதற்கு முன், அவர்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு அதனை செய்யுங்கள் என்றார்.

    தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி

    தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி

    பெண்ணுரிமை சமூக நீதிபேசுபவர்களால் மனிகுணமில்லாமல் மிருகத்தனமாக 120 வீடுகள் இடிக்கப்படுகிறது எனவும், இந்த அரசாங்கம் மேம்பாலம் பார்க் எல்லாம் கட்டுவதாக கூறுகின்றனர். ஆனால் மிகவும் மோசமான ஒரு நிர்வாகம் மிகவும் மோசமான அரசாங்கமாக திமுக உள்ளதாகவும், நெருக்கடி நிலையை விட மிகவும் மோசமான காட்டாச்சி சர்வாதிகார ஆட்சி சூழ்நிலை தமிழகத்தில் உள்ளதாகக் கூறிய ஹெச்.ராஜா. பிரதமர் தமிழகம் வரும் போது பலூன் விட்டு விளையாடினார்கள் எனவும், நீங்கள் பிரதமரை விமர்சிக்கலாம் ஆனால் முதல்வரை விமர்சிக்க கூடாதா எனவும், மகாத்மா காந்தி பெயரை கெடுக்க காந்தி அமைச்சராக இருப்பதாக்வும், கட்டப்பஞ்சாயத்து கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் அமைச்சர்களாக உள்ளனர் என கடுமையாக விமசித்தார்.

    அமைச்சர் காந்தி மீது தாக்கு

    அமைச்சர் காந்தி மீது தாக்கு

    நாங்கள் கட்டப்பஞ்சாயத்து அடிதடி செய்து அரசியலுக்கு வரவில்லை எனவும், அண்ணாமலை ஐபிஎ.ஸ் படித்து அரசியலுக்கு வந்துள்ளார், முதல்வர் ஸ்டாலின் காந்தி போன்றவர்களை கட்டுபடுத்தவில்லை என்றால் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், வெட்டுவானம் எல்லையம்மன் ஆலயத்தில் வெள்ளித்தேர் இருந்தது ஆனால் மரத்தேர் மட்டும் உள்ளது 128 கிலோ வெள்ளி அறநிலையத்துறையால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். தமிழகத்தில் தற்போதுள்ள அறநிலையத்துறை கோவிலை கொள்ளையடிக்கும் மோசமான துறையாக உள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள கோவில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் எனவும் ஹெச்.ராஜா கூறினார்.

    English summary
    H. Raja, a BJP national executive member, warned that Chief Minister Stalin should suppress people like Minister Gandhi, or face dire consequences.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X